பச்சை இலை காய்கறிகள் என்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தில் முக்கியம் வாய்ந்தவை. இவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. ஆனால் இவற்றில் குறைந்த கலோரிகளே உள்ளன. இந்தக் காய்கறிகளை உணவு பழக்கத்தில் சேர்த்து தினமும் உட்கொள்வது உடல் பருமன், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைத்து பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
கிளைக்கோசு அல்லது மரக்கோஸில் நார்ச்சத்து, வைட்டமின் சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன, செரிமானத்திற்கு உதவுகின்றன. கிளைக்கோசு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது புற்றுநோயைத் தடுக்க உதவும். கிளைக்கோசு உடலில் உள்ள செல்களின் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
பச்சை பட்டாணி தாவர அடிப்படையிலான புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவற்றின் நல்ல மூலமாகும். இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேநேரம் செரிமானத்திற்கு உதவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன. இதில் சல்போராபேன் என்ற கலவை உள்ளது. அது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. ப்ரோக்கோலியின் வழக்கமான நுகர்வு நமது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன.
மேலும் படிங்க சரும ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ உணவுகள்
குறைந்த கலோரிகள் கொண்ட பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது எடை மேலாண்மை மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. பீன்ஸில் வைட்டமின்கள் சி, கே மற்றும் மாங்கனீசு ஆகியவற்றை கொண்டுள்ளது.
சீமை சுரைக்காய் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பொட்டாசியம் நிறைந்த குறைந்த கலோரி காய்கறியாகும். இது கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது. இந்தக் காய்கறியின் அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக உடலின் ஒட்டுமொத்த நீரேற்றமும் மேம்படுகிறது.
கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது சரும மேம்பாட்டிற்கும் பார்வையை திறனுக்கும் உதவுகிறது. கீரை பொதுவாகவே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.
பரட்டைக் கீரை அதிக அளவு வைட்டமின் கே, ஏ மற்றும் சி கொண்ட ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும். இது உடலுக்கு கால்சியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களையும் வழங்குகிறது. பரட்டைக் கீரையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வீக்கத்தைக் குறைக்கவும் இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. பரட்டைக் கீரையை சமைத்தால் அதன் ஊட்டச்சத்து குறையும். எனவே நன்கு கழுவி பச்சையாக சாப்பிடுவது சிறந்தது.
மேலும் படிங்க வெந்தய கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
வெள்ளரிக்காயில் வைட்டமின்கள் கே மற்றும் சி ஆகியவற்றில் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]