herzindagi
food to look beautiful tip

Foods To Look Beautiful in Tamil: உங்களை உள்ளிருந்து அழகாக்கும் உணவுகள்

உங்களை அழகாக வைத்திருக்கும் உணவுகள் குறித்து அழகு நிபுணர் ஷானாஸ் ஹுசைன் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
Expert
Updated:- 2023-02-07, 09:04 IST

அழகான சருமம், முகம், நகம், முடி என வெளிப்புற அழகின் மீதே பலரின் கவனமும் இருக்கிறது. இவற்றை பராமரிக்க, மேலும் அழகாக்க பல விதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். இதுபோன்ற ரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகள் உங்களுக்கு தற்காலிக அழகை மட்டுமே தரும். எனவே, வெளிப்புற உடலை கவனித்துக்கொள்வதோடு மட்டுமின்றி, உட்புற அழகிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு வழக்கமான அழகு பராமரிப்புடன் சேர்த்து உடல் தகுதி, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம், மன அழுத்தம் போன்ற முக்கியமான சில விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தெளிவான சருமம், அடர்த்தியான கூந்தல் மற்றும் ஒல்லியான உடல் அமைப்பு போன்ற விஷங்களை சாத்தியமாக்க மன அழுத்தத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள். இதற்கு உங்களுடைய உணவு மற்றும் உடற்தகுதியை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டிய உணவு மாற்றங்கள்

food to look beautiful

  • நீங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாகவும், குறைந்த அளவு சர்க்கரை உடையதாகவும் இருக்க வேண்டும்.
  • ஃபிரெஷ் ஆன பழங்கள், பச்சை காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட், முளை கட்டிய பயறு வகைகள், தானியங்கள், தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான மற்றும் சமசீரான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
  • முழு தானியங்களை சாப்பிடுங்கள். அடிக்கடி டீ, காஃபி குடிப்பதை தவிர்க்க முயற்சி செய்யலாம்.
  • ஃபிரஷ் ஆன பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை தவிர்க்கவும்.
  • அதிக இனிப்புகளைத் தவிர்க்கவும். எப்போதும் இனிப்பு உணவுகளை குறைவாக எடுத்துகொள்வது நல்லது.
  • ஒரு எலுமிச்சையின் சாறு எடுத்து, அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து தினமும் காலையில் குடிக்கலாம்.
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் உலர் திராட்சை நீர்

உடற்பயிற்சி செய்யலாம்

food to look beautiful

  • ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற சில வகையான உடற்பயிற்சிகளை செய்யவேண்டியது அவசியம்.
  • சீரான உணவு சாப்பிடுவதுடன் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை செய்வது உங்கள் மனநிலையையும் மேம்படுத்தும்.
  • நடைப்பயிற்சி ஒரு நல்ல உடல் செயல்பாடு, ஏனெனில் இது அனைத்து தசைகளையும் செயல்படுத்துகிறது. ஆகையால் தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய முயற்சி செய்யலாம்.
  • குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றலைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இளமையிலேயே முதுமை அடைவதை உணர்த்தும் ஐந்து அறிகுறிகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]