இரும்புச் சத்து என்பது பல்வேறு உடல் செயல்பாடுகளில் குறிப்பாக ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமாகும். இது நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது.
இரும்புச்சத்து போதுமான அளவு இல்லாதபோது உடல் போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. இது இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை எனப்படும் நிலைக்கு வழிவகுக்கிறது. ஹீமோகுளோபின் உங்கள் உடலில் ஆக்ஸிஜனை நகர்த்துகிறது.
உங்கள் உடல் இரும்புச் சத்தை சேமிக்க முடியும் ஆனால் இரும்புச் சத்தை உருவாக்க முடியாது. இரும்புச் சத்தைப் பெறுவதற்கான ஒரே வழி அதை உட்கொள்வது மட்டுமே.
ஆண் - தினமும் 11 மில்லி கிராம்
பெண் - தினமும் 15 மில்லி கிராம்
ஆண் - தினமும் எட்டு மில்லி கிராம்
பெண் - தினமும் 18 மில்லி கிராம்
மேலும் படிங்க Boost Immunity : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் ஃபுட்ஸ்
நீங்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அவை இரும்புச்சதை அதிக அளவில் உறிஞ்சுவதற்கும் உதவும்.
உடலில் இரும்பு அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நீங்கள் எளிதில் சோர்வடைவீர்கள், தலைவலி ஏற்படும், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது கடினமாகும்.
மேலும் படிங்க Health Benefits of Prunes : ஊட்டச்சத்து நிறைந்த கொடிமுந்திரி
உடலில் அதிகப்படியான இரும்புச் சத்து தீங்கு விளைவிக்கும். நீங்கள் இரும்புச் சத்துக்களை எடுத்துக்கொள்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும். சிலருக்கு ஹீமோக்ரோமாடோசிஸ் எனப்படும் மரபணு நிலை உள்ளது. இந்த நிலை நீங்கள் அதிக இரும்புச் சத்தை சேமிக்க செய்திடும். ஒவ்வொரு 200 பேரில் ஒருவருக்கு ஹீமோக்ரோமாடோசிஸ் உள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]