herzindagi
foods that improve thyroid function

Thyroid Diet : தைராய்டு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

உணவுப் பழக்கம் தைராய்டு பிரச்சினையை சரி செய்யும் என்று பரிந்துரைக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் தைராய்டு சுரப்பியை ஆதரிக்க அயோடின் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை.
Editorial
Updated:- 2024-02-04, 17:24 IST

தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை கட்டுப்படுத்துகிறது. இது தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்து பல உயிரியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. தைராய்டு சுரப்பி மந்தமாகவோ அல்லது அதிகமாக செயல்படும் போது அது உடலில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தைராய்டு சுரப்பியின் உகந்த செயல்பாட்டை உறுதி செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நாம் உண்ணும் உணவாகும். நமது சாப்பிடும் உணவில் உள்ள பல கூறுகள் தைராய்டு சுரப்பி சீராக இருக்க அல்லது அது சரியாகச் செயல்படவில்லை என்றால் சமநிலை நிலையை அடையவும் உதவும்.

foods for thyroid health

யோகர்ட்

பால் பொருட்கள், முக்கியமாக யோகர்ட், மிகவும் சத்தானது மற்றும் உடலின் அயோடின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. தைராய்டு சுரப்பியின் உகந்த செயல்பாட்டிற்கு அயோடின் தேவைப்படுகிறது.

பழங்கள்

ஆப்பிள்கள், பேரிக்காய், பிளம்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்களில் பெக்டின்கள் ஏராளமாக உள்ளன. இவை உடலை நச்சுத்தன்மையாக்கும் மெர்குரியை விரட்ட உதவுகின்றன. மெர்குரி தைராய்டு பிரச்சினைகளுடன் தொடர்புடைய மிக முக்கியமான உலோகங்களில் ஒன்றாகும்.

நட்ஸ்

பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை துத்தநாகத்தின் வளமான ஆதாரங்களாகும். குறைந்த அளவு ஜிங்க் தைராய்டு பிரச்சனைகளுடன் தொடர்புடையது. உங்கள் உடலில் துத்தநாகத்தை நிரப்ப சாலட்களில் சேர்க்கவும் அல்லது தின்பண்டமாக சாப்பிடவும்.

பருப்பு வகைகள், பீன்ஸ்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் ஜிங்க் மட்டுமின்றி நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இவை செரிமான அமைப்பை, குறிப்பாக குடல் இயக்கத்தைச் சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகின்றன. கொண்டைக்கடலை தைராய்டு பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமான சேர்க்கைகளில் ஒன்றாகும்.

மேலும் படிங்க சப்ஜா விதைகள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

கிரீன் டீ 

கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதாக அறியப்படுகிறது. க்ரீன் டீயில் கேடசின்கள் உள்ளன. இது ஒரு வகையான ஆக்ஸிஜனேற்றியாகும். இது கொழுப்பு செல்களை இருந்து கொழுப்பை வெளியேற்றவும் மற்றும் அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும் கல்லீரலுக்கு உதவுகிறது.

தானியங்கள்

தானியங்களை ஜீரணிக்க உடல் அதிக சக்தியைப் பயன்படுத்துகிறது. தானியங்களை உடைக்க உடல் கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால் கூடுதல் நார்ச்சத்து மூலம் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. ஓட்ஸ், பிரவுன் ரைஸ், தானிய ரொட்டி மற்றும் குயினோவா ஆகியவற்றை சாப்பிட முயற்சிக்கவும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தித் தைராய்டு சுரப்பிக்கு உதவவும்.

அவகேடோ

அவகேடோ பழம் ஊட்டச்சத்தின் அதிசய உணவாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவகேடோ பழம் சமநிலையற்ற தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு அவசியமாகும்.

மேலும் படிங்க யோகர்ட்டில் கொட்டிகிடக்கும் அற்புத பயன்கள்

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ப்ரோக்கோலி சாப்பிட்டவுடன் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]