
எடையை குறைக்கணும், அதுவும் வேகமாக குறைக்கணும். நல்லா சாப்பிடனும் ஆனா வெயிட் மட்டும் போடவே கூடாது. இது படிக்க வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் சாத்தியம் கிடையாது. அப்படியே எடை வேகமாக குறையும் என்றால், அந்த திட்டத்தால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதை ஒன்றுக்கு பல முறை யோசித்த பின்னரே அதை பின்பற்ற வேண்டும்.
பொதுவாக பெண்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் 2-3 நாளைக்கு டயட், உடற்பயிற்சி என தீவிரமாக இருப்பார்கள். பின் குண்டாக இருப்பதும் அழகுதான் என்று தங்களை தேற்றிக்கொண்டு எடையை குறைக்கும் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வீட்டு வேலை, குழந்தைகள், தொழில் அல்லது அலுவலகம் என பல பொறுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது தங்களுக்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் பல பெண்களும் சிரமப்படுகிறார்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால், இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். தொடர்ந்து டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் நிச்சயமாக சிறந்த பலன்களை காண முடியும். இதற்கு உதவக்கூடிய ஒரு எளிமையான டயட் பிளானை ஊட்டச்சத்து நிபுணரான இட்டு சாப்ரா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீரக கல் வராமல் தடுக்க, இந்த 4 குறிப்புகளை பின்பற்றினால் போதும்!

முதலில் உங்களுடைய தற்போதைய உடல் எடையிலிருந்து எவ்வளவு எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள். உங்கள் இலக்கை அடைய எத்தனை வாரம் அல்லது மாதங்கள் தேவைப்படும் என்பதை திட்டமிடுங்கள். உங்களுடைய இலக்குகள் அடையக்கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரம்ப காலத்தில் குறைவான இலக்கை வைத்துகொள்ளவும். உங்களுடைய முதல் இலக்கை அடையும் பொழுது உங்களுக்கு தன்னம்பிக்கையும், விடாமல் தொடர வேண்டும் என்ற எண்ணமும் வரும்.
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்த பின் ஒரே சமயத்தில் பலவிதமான உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதும் ஆபத்தானது. இதற்கு பதிலாக உணவுகளை சிறிய பகுதிகளாக குறிப்பிட்டு இடைவெளிகள் விட்டு எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் சோம்பு மற்றும் வெந்தய விதைகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
உங்களுடைய காலை உணவு புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். இதற்கு பாசிப்பருப்பு அல்லது பச்சை பயிறு போன்ற புரதம் நிறைந்த பருப்பு வகைகளை வைத்து தோசை செய்து சாப்பிடலாம். நீங்கள் விரும்பினால் இதில் சுரைக்காயையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தோசைக்கு பதிலாக 2 இட்லியுடன், காய்கறிகள் சேர்த்த சாம்பாரையும் எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவிற்கு ஓட்ஸ் சப்பாத்தியுடன் ஒரு கப் காய்கறி மற்றும் சாலட் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுடன் ½ தயிர் சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்
இரவு உணவை ஏழு மணிக்குள் சாப்பிட முயற்சி செய்யவும். அரை கப் சாலட் உடன் கிச்சடி அல்லது சப்பாத்தியை இரவு உணவிற்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பதிலாக குயினோவா, பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து சமைத்த கிச்சடியையும் இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
மூன்று வேளை உணவின் இடைப்பட்ட நேரத்தில் கிரீன் டீ அல்லது மூலிகை டீயையும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைய, சரும பொலிவு பெற ஒரே ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]