PCOD Diet : நீர்க்கட்டி பிரச்சனையை டயட் மூலம் குணப்படுத்த முடியுமா?

PCOD அல்லது நீர்க்கட்டி பிரச்சனையை ஆரோக்கியமான டயட் மூலம் குணப்படுத்த முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை நிபுணரிடமிருந்து கேட்டறிவோம்…

can healthy diet cure pcos

PCOD எனும் ஹார்மோன் பிரச்சனையால் பெண்களின் கருவுறுதல் மற்றும் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். இன்றைய காலகட்டத்தில் பலரும் இந்த PCOD பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதனால் கருத்தரிப்பதிலும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால் அதிகரிக்கும் உடல் எடை முதல் பலவீனம் வரை பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. PCOD பிரச்சனையால் பெண்களின் கருப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் உருவாகும். இது மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உணர்வு ரீதியாகவும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நீர்கட்டிகள் ஏற்படுத்தும் ஹார்மோன் சமநிலையின்மையால், மன ரீதியாகவும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் PCOD அல்லது நீர்கட்டி பிரச்சனைகளை சமாளிக்க சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உண்மையில் ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறை மூலம் நீர்க்கட்டிகளை குணப்படுத்த முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையை உணவியல் நிபுணரான ராதிகா கோயில் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PCOD டயட்

pcod diet tips for women

நீர்க்கட்டி பிரச்சனையை எதிர் கொள்ள ஆரோக்கியமான உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு சமச்சீரானதாக இருக்க வேண்டும். உங்கள் உணவில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். சரியான டயட்டை பின்பற்றும் பொழுது ஹார்மோன்களில் நீர்மறையான விளைவுகளை காணலாம். இது அழற்சி மற்றும் நீர் கட்டிகளின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடித்து வந்தால் நீர் கட்டிகளின் தாக்கமும் படிப்படியாக குறைந்து விடும். இருப்பினும் மருத்துவ ஆலோசனையும் அவசியம்.

நீர்க்கட்டி பிரச்சனைக்கு தீர்வு

pcod diet tip by expert

  • PCOD அல்லது நீர்கட்டியால் சிரமப்படுபவர்கள் சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய உணவில் முழு தானியங்கள் பழங்கள் காய்கறிகள் புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்.
  • இவை அனைத்தும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், நூல்களை சமநிலையாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
  • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் அளவுகள் மற்றும் நீர் கட்டியின் அறிகுறிகளை சமாளிக்கலாம்.
  • நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். இது இன்சுலின் எதிர்ப்பை மாற்றி அமைக்க உதவுகிறது.
  • ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவுகளையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
  • நீர்க்கட்டி பிரச்சனையை சமாளிக்க உடல் எடையை வரம்புக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்புகள் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • மஞ்சள், இஞ்சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அழற்சிவ எதிர்ப்பு உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ள ஒரு நாளைக்கு தேவையான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • நீர்கட்டிகளின் அறிகுறிகளை சமாளிக்க ஊறவைத்த பாதாம் அக்ரூட் பருப்புகள் மற்றும் சூரியகாந்தி விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

தற்போது வரை நீர்கட்டிகளை முற்றிலும் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் ஏதும் கணறியப்படவில்லை, இருப்பினும் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அதன் அறிகுறிகளை நிச்சயம் சமாளிக்கலாம். உங்களுடைய ஹார்மோன் அளவுகள் உடல் எடை போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு உங்களுக்கான ஒரு பிரத்தியேக உணவ திட்டத்தை உணவியல் நிபுணரை ஆலோசித்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற நிபுணரின் 3 நாள் டீடாக்ஸ் டயட் பிளான்!


இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP