
கற்பூரவள்ளி இலையில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உடலில் உள்ள நச்சுக்களை நீக்குதல், செரிமானத்தை மேம்படுத்துதல், மூட்டுவலி வலியைக் குறைத்தல், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைப் போக்குதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
கற்பூரவள்ளி செடியை சமையலறை தோட்டத்திலேயே சுலபமாக வளர்க்க முடியும். சளி, இருமல், வயிற்று வலி போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு கற்பூரவள்ளி வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு இது சிறந்தது. ஆயுர்வேத மருத்துவரும், சுகாதாரப் பயிற்சியாளருமான டாக்டர் ஐஸ்வர்யா சந்தோஷ் அவர்கள் கற்பூரவள்ளி சாறின் நன்மைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: ஹார்மோன் சமநிலைக்கு உதவும் நிபுணரின் ஒரு நாள் டயட் பிளான்
மூக்கு ஒழுகுதல் பிரச்சனையை சரி செய்ய, ஒரு கடாயை சூடாக்கி அதில் ஃபிரஷ்ஷாக பறிக்கப்பட்ட கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து வாட்டி எடுக்கவும். இதனை பிழிந்து சாறு எடுத்து நெற்றி மற்றும் மார்பில் தடவலாம். கற்பூரவள்ளி இலையின் சாறை குடிப்பதன் மூலம் நெஞ்சு சளி, மூக்கடைப்பு, சளி, தொண்டை கரகரப்பு மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
காய்ச்சலை குறைக்க கற்பூரவள்ளி இலைகளின் சாறை குடிக்கலாம்.

கற்பூரவள்ளி சாறில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் C அதிகமாக உள்ளது. இது தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவும்.
கற்பூரவள்ளியின் சாறை பூச்சி கடித்த இடத்தின் மீது தடவலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சல், அரிப்பு மற்றும் தொற்றை தடுக்க உதவுகிறது. இது சிறிய காயங்களுக்கு நன்மை தரும்.
கற்பூரவள்ளியின் சாறில் வைட்டமின் C நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும் இதில் உள்ள வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்டுகள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

கற்பூரவள்ளி இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் உள்ளன. இதன் சாறை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். மேலும் இதில் உள்ள தைமால் பாக்டீரியா தொற்றுகளை தடுக்கிறது.
கற்பூரவள்ளி இலையின் சாறு வயறு சார்ந்த பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை தீர்க்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு அளவில்லா நன்மைகளை அள்ளித் தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]