herzindagi
image

இட்லி பிரியர்களாக நீங்கள்? அப்ப இந்த ஆரோக்கிய நன்மைகளை நிச்சயம் பெறுவீர்கள்!

காலை உணவாக இட்லியை சாப்பிடும் போது இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறது.
Editorial
Updated:- 2024-10-15, 07:21 IST

இட்லி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஹோட்டல்களுக்குச் சென்றாலும் நிறைய உணவுகளின் லிஸ்ட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். அத்தனையும் காதுக் கொடுத்து கேட்டு விட்டு இட்லி இருக்கா? என்ற கேள்வியோடு நம்முடைய உணவுகளை ஆர்டர் செய்வோம். அந்தளவிற்கு இட்லி மீதான காதல் மக்கள் அதிகளவில் உள்ளது. அதுவும் காலை உணவாக இட்லி சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும் எனவும், மற்ற உணவுகளை விட சிறந்த காலை உணவாக நிச்சயம் இது இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

அரிசி மற்றும் உளுந்து, வெந்தயம் போன்ற உடலுக்கு ஆற்றல் அளிக்கும் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது இட்லி அல்லது தோசை மாவு. மாவை புளிக்க வைத்து சாப்பிடும் போது இதில் உள்ள நொதித்தல் தன்மையால் புரத சத்துக்கள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இதோடு மட்டுமின்றி நமக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட முதலில் தேர்வு செய்யும் உணவாக இட்லி தான் உள்ளது.

idli preparation

மேலும் படிக்க: Saffron color Frutis Benefits: குங்குமப்பூ நிற பழங்கள் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகச் செயல்படும் வழிகளைப் பார்க்கலாம்

கலோரிகள் குறைவு:

சப்பாத்தி, பொங்கல், தோசை, பூரி போன்ற மற்ற உணவுகளை ஒப்பிடும் போது இட்லியில் கலோரிகள் மிகவும் குறைவு. சாப்பிடக்கூடிய உணவுகள் எளிதில் ஜீரணமாவதற்கு உதவக்கூடும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனையின்றி இருக்க முடியும். குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. மேலும் உடல் எடையையையும் கணிசமாக குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

இட்லியில் புரதசத்துக்கள் அதிகளவில் உள்ளதால் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை நமக்கு ஏற்படுத்தாது. இதனால் தேவையில்லாமல் அதிகளவு ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தடுக்க முடியும். உடல் எடையை பாதுகாப்பதோடு பல நோய் பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்க முடிகிறது. மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் வலிமை பெறுகிறது.

யாரெல்லாம் சாப்பிடலாம்?

இட்லி சாப்பிடுவதற்கு மென்மையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய வகையில் உள்ளது. என்ன தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த திட உணவுகளைக் கொடுத்தாலும் பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு இட்லியில் இருந்து தான் ஆரம்பிப்பார்கள்.

மேலும் படிக்க: Pineapple Leaves Benefits: தூக்க எறியப்படும் அன்னாசி இலைகளில் இருக்கும் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

உடல் நல குறைபாடு உள்ள வயதானவர்கள் கூட இட்லியை அவர்களின் காலை உணவாக மட்டுமல்ல இரவு நேரங்களில் கூட சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் எளிதில் ஜீரணமாவதற்கு உதவியாக உள்ளது. இதில் உளுந்து சேர்க்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக உள்ளது இட்லி. இனி உங்களது வீடுகளில் மறக்காமல் இட்லியை சாப்பிடுங்கள்.

Image source- Google 

 

 

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]