நெல்லிக்காய் மற்றும் கற்றாழையில் தனித்துவமான பல நன்மைகள் நிறைந்துள்ளன. இவை பல உடல்நல பிரச்சனகளுக்கு தீர்வாக அமைகின்றன. இவ்விரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொண்டால் அதன் நன்மைகள் இரட்டிப்பாகும். இந்த கலவையில் புரதம், ஆற்றல், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், செல்லினியம், வைட்டமின் C, வைட்டமின் B6 போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். இதனால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நெல்லி கற்றாழை ஜூஸின் ஆரோக்கிய நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான வருன் கத்யால் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மேல் உடலை வசீகரமாக மாற்றும் ABS பயிற்சிகள்!
நெல்லி கற்றாழை ஜூஸ் குடிப்பது கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. கற்றாழையில் உள்ள பண்புகள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. இந்நிலையில் உங்களுடைய கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நெல்லி கற்றாழை ஜூஸை உங்களுடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய் மற்றும் கற்றாழை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இந்த கலவையில் உள்ள பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்த் தொற்றுகளின் அபாயத்தையும் குறைக்கின்றன.
கற்றாழை மற்றும் நெல்லிக்காய் இந்த இரண்டு பொருட்களுமே கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. பலவீனமான முடி அல்லது முடி உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லி கற்றாழை ஜூஸை குடித்து பயன்பெறுங்கள். நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் C முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வர நல்ல ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
நெல்லி கற்றாழை ஜூஸ் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் நெல்லிக்காயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும நிறத்தை மேம்படுத்துகின்றன. உங்களுடைய உணவு வழக்கத்தில் நெல்லி கற்றாழை ஜூஸை சேர்த்து வர கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகளை நீக்கி, அழகும் ஆரோக்கியமும் பெறலாம்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட உணவு முறையில் ஒரு சில மாற்றங்களை செய்தால் போதும். நெல்லி கற்றாழை ஜூஸ் உடல் பருமனை தடுக்கிறது. இந்த கலவையில் உடல் பருமனை எதிர்க்கும் பண்புகளும் காணப்படுகின்றன. இவை அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருந்தாலும் இதனை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது.
உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை அல்லது அலர்ஜி இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் இதை பின்பற்றுவது நல்லது. நெல்லிக்காய் அல்லது கற்றாழைக்கு அலர்ஜி உள்ளவர்கள், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் இந்த ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: 40 வயதிலும் இளமையாக இருக்கலாம், கொலாஜன் நிறைந்து இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]