Ice Apple Health Tips: கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க நுங்கை சாப்பிடுங்கள்!

கோடையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் நுங்கை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்

ice apple

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் காரணமாக உடலின் உஷ்ண நிலை அதிகரித்து உடலில் உள்ள நீர்ச்சத்து குறைகிறது. இதன் காரணமாக நாம் கோடைக்காலங்களில் அதிக சேர்வாக உணர்கிறோம். நம் உடலை கோடை காலத்தில் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள தர்பூசணி, மாம்பழம், லிச்சி, முலாம்பழம், பாதாமி, எலுமிச்சை போன்ற பல பருவகால பழங்களை உணவில் சேர்த்து கொள்கிறோம். அவற்றில் முதன்மையானது, கோடையில் ஏற்படும் பல உடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் நுங்கை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.

நுங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நுங்கில் கார்போஹைட்ரேட், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. ஆனால் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் C, A, E மற்றும் K போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தவிர இரும்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இதில் அதிகம் உள்ளது.

நுங்கு சாப்பிடுவதற்கான 5 காரணங்கள்

  • காலையில் ஏற்படும் வயிற்று உப்புசம் பிரச்சனை தீர்க்கும்.
  • அசிடிட்டி காரணமாக அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் நுங்கு சாப்பிடலாம்.
  • மலச்சிக்கலுக்கு நுங்கு நல்ல தீர்வு.
  • தோல் நிறம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும்
  • தோலில் அரிப்பு மற்றும் சொறி பிரச்சனைகளை தீர்க்கும்

மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் கோடைக்காலத்தில் மிகவும் தொந்தரவாக இருக்கும். நுங்கில் வைட்டமின் பி-12 உள்ளதால் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் வயிற்றின் அமிலத்தன்மை குணமாக்கும். மேலும், உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் நீக்குகிறது. இதில் நார்ச்சத்தும் இருப்பதால் செரிமான பிரச்சனையை சரிசெய்து மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது.

தோல் வெடிப்பு

Skin care

கோடையில் சருமத்தில் சொறி பிரச்சனை வருவது சகஜம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும், கோடையில் எரியும் அரிப்புகளிலிருந்து குணமாக்கும். அதுமட்டுமின்றி நுங்கு முகத்தை பளபளப்பாக்கும். இது ஃப்ரீ-ரேடிக்கல்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

உடல் நீரேற்றமாக இருக்கும்

கோடைக்காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் உடலில் நீர்ச்சத்து குறையும் பிரச்சனை ஏற்படுகிறது, இதனால் கோடையில் உடலின் ஆற்றல் அளவு குறையத் தொடங்குகிறது. நுங்கில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளதால் நீரிழப்பு ஏற்படாமல் உடலை காக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: கடல் உணவுகளில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நுங்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பலப்படுத்துகிறது. இதை தினமும் சாப்பிடுவதால் நோய்கள் மற்றும் தொற்றுகளை எளிதில் எதிர்த்துப் போராடுகிறது.

வீக்கம் குணமாகும்

வழக்கமான உடற்பயிற்சி மற்றும் டயட்டில் கவனம் செலுத்தினாலும், கோடையில் வயிற்று உப்புசம் பிரச்சனை உங்களைத் தொந்தரவு செய்தால் நுங்கு உங்களுக்கு சிறந்த பழமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

தலைவலி போய்விடும்

headache

தலைவலி என்பது ஒரு பெரிய பிரச்சனை, இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் கோடையில் சிரமப்படுகிறார்கள். மலச்சிக்கல் காரணமாகவும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நுங்கு உதவியாக இருக்கும். இந்த கோடையில் நீங்கள் இன்னும் நுங்கு சாப்பிடவில்லையா, இன்றே சாப்பிட்டு பாருங்கள். இது சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது.

உங்களுக்கும் ஏதேனும் உணவு தொடர்பான தகவல்கள் தேவைப்பட்டால், கட்டுரையின் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும். இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க herzindagi-யில் இணைந்திருங்கள்.


image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP