ஒரு நல்ல உணவில் சுவையும் ஆரோக்கியமும் சம நிலையில் இருக்க வேண்டும். டயட் உணவாக இருந்தாலும் சரி அதில் கொஞ்சம் சுவை இருந்தால் மட்டுமே அதை தொடர்ந்து சாப்பிட முடியும். அதேசமயம் ஆரோக்கியத்தில் எந்த சமரசமும் செய்யாமல் சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மத்தியில் முட்டை சிக்கன் அல்லது மட்டன் பிரபலமாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் கட்டாயமாக கடல் உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடல் உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், வைட்டமின் A, B போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மத்திய அரசு மருத்துவமனையான ESIC மருத்துவமனையின் உணவியல் நிபுணரான ரிது பூரி அவர்கள் கடல் உணவுகளின் மிகச்சிறந்த சில நன்மைகள் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: நிரந்தரமாக உடல் எடை குறைய இந்த 3 விஷயங்களை பின்பற்றுங்கள்
கண்களுக்கு நல்லது
கடல் உணவுகளை சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் A மற்றும் ஒமேகா -3 கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. கண்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க கடல் உணவுகளை சாப்பிடலாம்.
மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது, சருமம் மற்றும் கூந்தலில் நேர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. இதில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். இன்று பல இடங்களில் மீன் எண்ணெய் மாத்திரைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இது சருமத்தை அழகாக்கும்.
தசை வளர்ச்சிக்கு உதவும்
கடல் உணவுகள் புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது தசை வளர்ச்சியை விரும்புபவர்கள் கடல் உணவுகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் நல்ல அளவு பொட்டாசியம் மற்றும் சோடியம் உள்ளது. உடற்பயிற்சி செய்த பிறகு கடல் உணவுகளை சாப்பிடுவது தசை வளர்ச்சிக்கு உதவும்.
உடலை வலிமையாக்கும்
கடல் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். ஏதேனும் உடல்நல பிரச்சனைக்கு பிறகு உடலை மீட்டெடுக்க விரும்பினால் அல்லது பலவீனமாக உணர்ந்தால் கடல் உணவுகளை சாப்பிடலாம். இது உடல் நல பிரச்சனையில் இருந்து விரைவில் மீண்டு வர உதவும். மேலும் கடல் உணவுகளை சாப்பிடுவதால் ஆரோக்கியமும் மேம்படும்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இது கடல் உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஒரு மிகச்சிறந்த நன்மையாகும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகலாம். இந்நிலையில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கடல் உணவுகளை சாப்பிடலாம். மேலும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் கடல் உணவுகள் நன்மை தரும்.
நீங்களும் கடல் உணவுகளை சாப்பிட்டு அதன் ஆரோக்கிய நன்மைகளை பெற்றெடுங்கள். கடல் உணவு பிரியவர்களுக்கு இப்பதிவை மறக்காமல் பகிருங்கள்!
இந்த பதிவும் உதவலாம்: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த 5 நட்ஸ்களையும் ஊறவைத்து சாப்பிடுங்கள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation