herzindagi
if asafetida is not in house then you can use these things

என் வீட்டில் பெருங்காயம் இல்லாவிட்டால், அதற்கு பதில் எதை பயன்படுத்துவது?

பெருங்காயம் தீர்ந்து விட்டால் அதற்கு பதிலாக என்னென்ன பொருட்களை சேர்க்கலாம் என்பதை இப்பதிவில் படித்தருவோம் வாருங்கள்.
Editorial
Updated:- 2022-12-16, 13:00 IST

சில சமயங்களில், நாம் சமைக்கும்போது சில மசாலா பொருட்கள் தீர்ந்துவிடும். தினசரி உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் ஒரு மசாலா பொருள் குறைந்தால் கூட உணவின் சுவை மாறுபடும்.

உங்கள் சமையலறையில் பெருங்காயம் தீர்ந்துவிட்டால் அதற்கு பதிலாக சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பெருங்காயத்திற்கு மாற்றாக நீங்கள் உணவில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள்பற்றி இன்று இந்த பதிவில் சொல்லப் போகிறோம். பெருங்காயத்திற்கு மாற்று பொருட்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பூண்டு பொடி

garlic powder

உங்களுக்குப் பெருங்காயம் தேவைப்பட்டாலோ வீட்டில் பெருங்காயம் தீர்ந்துவிட்டாலோ நீங்கள் அதற்கு பதில் பூண்டு பொடியைப் பயன்படுத்தலாம். இது பெருங்காயத்தை விடவும் நல்ல சுவை அளிக்கும். மேலும் காய்கறியின் சுவையையும் கூட்டும். ஒரு ஸ்பூன் பூண்டு பொடியைப் பயன்படுத்தினாலே போதும்.

இந்த பதிவும் உதவலாம்: கொண்டைக்கடலையை பாதுகாப்பாக சேமித்து வைப்பது எப்படி?

வெங்காயப் பொடி

வீட்டில் பெருங்காயம் இல்லையென்றால் அதற்கு பதில் வெங்காயப் பொடியைப் பயன்படுத்தலாம். இதை வீட்டிலேயே செய்யலாம் அல்லது கடையிலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். காய்கறியில் ஒரு டீஸ்பூன் வெங்காயப் பொடியை சேர்த்தாலே போதும் அதன் சுவை அதிகரிக்கும்.

வெங்காயத்தாள் மற்றும் பூண்டு விழுது

garlic paste

பெருங்காயத்திற்கு மாற்றாக வெங்காயத்தாள் மற்றும் பூண்டு விழுதைப் பயன்படுத்தலாம். காய்கறியின் சுவையை அதிகரிக்க இந்த முறையையும் முயற்சி செய்து பார்க்கலாம். இந்த விழுதை 1 டீஸ்பூன் சேர்த்தாலே போதும் காய்கறியின் சுவை பன்மடங்கு அதிகமாகும். இதை விழுதாக அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து 2 முதல் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நாம் தூக்கி வீசும் எலுமிச்சை தோலால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!!

வெங்காய விழுது

பல உணவுகளில் பெரும்பாலும் நாம் வெங்காய விழுதைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பெருங்காயத்திற்கு மாற்றாக இதையும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உங்கள் வீட்டில் பெருங்காயம் தீர்ந்துவிட்டால் வெங்காய விழுதைப் பயன்படுத்தலாம். இது பெருங்காய சுவையையும் தந்து காய்கறி கிரேவியை கெட்டியாக்குகிறது.

உணவின் சுவையை அதிகரிக்க நீங்கள் எந்த மசாலா பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள்? என்பதை கமெண்டில் தெரியப்படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]