herzindagi
use of lemon peel big

நாம் தூக்கி வீசும் எலுமிச்சை தோலால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!!

எலுமிச்சை தோல், எப்படி எல்லாம் நமக்கு உதவுகிறது என்பதை இந்த பதிவில் படித்தறிந்து பயன் பெறலாம்.
Editorial
Updated:- 2022-11-17, 13:00 IST

எலுமிச்சை பழம் மட்டுமல்ல. அதன் தோல் கூட எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எலுமிச்சை நம் அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு பழமாகும். எந்தவொரு உணவின் சுவையையும் மேலும் அதிகப்படுத்துவது எலுமிச்சை பழம் மட்டும் தான். இது உணவின் சுவையை அதிகப்படுத்துவதோடு, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் நமக்கு உதவுகிறது.

பெண்களே! எலுமிச்சை பழ தோலை நாம் எதற்கெல்லாம் உபயோகப்படுத்தலாம் என்பதனை இப்போது படித்தறிந்து பயன் பெறலாமா?

1. கிட்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள எலுமிச்சை தோல்

use of lemon peel

எலுமிச்சை சாறினை கொண்டு கிட்சனை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். ஆனால், எலுமிச்சை தோல் எப்படி உதவுமென்பது உங்களுக்கு தெரியுமா?

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை தோல் - 2 அல்லது 3
  • வெள்ளை வினிகர் - ½ கப்
  • தண்ணீர் - ½ கப்
  • ஸ்பிரே பாட்டில்

என்ன செய்வது?

  • எலுமிச்சை தோலை துருவி ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ளவும்
  • பிறகு, ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீரையும், வினிகரையும் கலந்துக்கொள்ளவும்
  • இப்போது துருவி வைத்திருக்கும் லெமன் தோலை அதனுடன் சேர்த்து கிண்டிக்கொள்ளவும். இதனை 1 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடவும்
  • அவ்வளவு தான் உங்கள் கிளீனர் இதோ ரெடியாகிவிட்டது. இதனை கொண்டு கிட்சன் மற்றும் கிட்சனின் மேல் புறங்களில் தெளிக்கவும். பிறகு, ஒரு துணியை கொண்டு துடைக்கவும்

2. நீங்கள் அருந்தும் டீயை இன்னும் இனிமையாக்க உதவும் எலுமிச்சை தோல்

use of lemon peel

பிளாக் டீ அல்லது லெமன் டீ போன்றவற்றுக்கு இனிமை சேர்ப்பது எலுமிச்சை சாறு தான். ஆனால், எலுமிச்சை தோல் சேர்த்தால், டீ இன்னும் சுவையாக இருக்குமென்பதை நீங்கள் அறிவீரா? இவ்வாறு எலுமிச்சை தோலை சேர்க்கும்போது எலுமிச்சை கலந்த வாசனையுடன், டீ அருந்துவதற்கு இதமாகவும் இருக்கும். ஆனால், இதனை எப்படி தயாரிப்பது? வாருங்கள் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை தோல் - 1 பழத்தின் தோல்
  • தண்ணீர் - 2 கப்
  • தேயிலை - 1 டீஸ்பூன்
  • கருப்பு உப்பு - 1 சிட்டிகை

என்ன செய்வது?

  • டீயினை தயாரிக்க கடாயில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
  • பிறகு தேயிலை சேர்த்து சூடுபடுத்தவும்
  • 5 முதல் 7 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்ட பிறகு, துருவிய எலுமிச்சை தோலை சேர்த்து இன்னும் 1 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்
  • அவ்வளவு தான், ஒரு சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து கப்பில் சுட சுட குடிக்கலாம்
  • இதுவரை நீங்கள் குடித்த டீ உடன் இதனை ஒப்பிட்டு பாருங்கள், நிச்சயம் மீண்டும் குடிக்க மனம் ஏங்கும்

3. கட்டிங் போர்டை சுத்தம் செய்ய உதவும் எலுமிச்சை தோல்

use of lemon peel

காய்கறிகளையும், பழங்களையும் நறுக்குவதற்கு கட்டிங் போர்டை நாம் பயன்படுத்துகிறோம். இந்த கட்டிங் போர்டை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். வெறுமனே தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்வதால், எந்த பலனும் இல்லை. அதற்காக தான் நாம் எலுமிச்சை தோலை இங்கே பயன்படுத்துகிறோம்.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை தோல் - 2 முதல் 3
  • உப்பு
  • வெதுவெதுப்பான தண்ணீர்

என்ன செய்வது?

  • முதலில் கட்டிங் போர்டை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு சுத்தப்படுத்தவும்
  • பிறகு உப்பினை தூவி வைத்து விடவும்
  • இப்போது எலுமிச்சை தோல் கொண்டு கட்டிங் போர்டை நன்றாக தேய்க்கவும். கடைசியாக, வெதுவெதுப்பான நீரில் அலசவும்

4. உணவுக்கு மணத்தை அளிக்கும் எலுமிச்சை தோல்

use of lemon peel

சிக்கன் விங்ஸ் அல்லது எந்தவொரு உணவாக இருந்தாலும், அதன் சுவையை மேலும் கூட்ட, எலுமிச்சை தோலை நாம் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதனால், உணவின் சுவை பல மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை தோல் - 2 அல்லது 3
  • தயார் செய்த பருப்பு, காய்கறி அல்லது ஸ்நாக்ஸ்

என்ன செய்வது?

  • நீங்கள் செய்து வைத்த ஸ்நாக்ஸ் அல்லது எந்தவொரு காய்கறி அல்லது பருப்பு உணவினை எடுத்துக்கொள்ளவும்
  • எலுமிச்சை தோலை துருவி பிளேட்டில் வைத்துக்கொள்ளவும்
  • சிக்கன் விங்ஸ், உருளைக்கிழங்கு கறி, சிக்கன் லாலிபாப் போன்ற வறுத்த உணவு இருந்தால், அதன்மேலே துருவிய எலுமிச்சை தோலை போட்டு வதக்கவும்
  • நம்மிடம் உள்ள காய்கறி, பருப்பு உணவு போன்றவற்றுடன் மேலே சேர்த்து வேகவைக்கலாம்
  • இது ஒவ்வொரு உணவிற்கும் கூடுதல் சுவை, மணம், புத்துணர்வை சேர்க்கும்

கிட்சனை சுத்தம் செய்வதில் தொடங்கி, சமையல் வரை எலுமிச்சை தோலை எப்படி எல்லாம் பயன்படுத்துவது என்பதனை நாம் இப்போது பார்த்தோம். இது நம்முடைய அன்றாட தேவைக்கு மிகவும் உதவியாக உள்ளது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]