ஓஜி கஞ்சா பயன்படுத்தி சிக்கிய நடிகர் கிருஷ்ணா ? வாட்ஸ் அப் குழுவில் கிடைத்த ஆதாரம்

நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி நண்பர்களுக்கும் அளித்த வழக்கில் கழுகு ஹீரோ கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். கெவின் என்ற நபரிடம் இருந்து நடிகர் கிருஷ்ணா போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
image

கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து கழுகு, யாமிருக்க பயமேன், மாரி 2 ஆகிய படங்களின் ஹீரோ நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். 20 மணி நேர விசாரணையில் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது

மே 22ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் மது அருந்திச் சென்ற இரு கும்பலிடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் மொத்தமாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நபர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அதே வழக்கில் கேரளாவுக்கு சூட்டிங் சென்ற நடிகர் கிருஷ்ணாவையும் காவல்துறை தனிப்படை அமைத்து தேடியது. ஜூன் 25ஆம் தேதி கிருஷ்ணாவிடம் தொடங்கிய விசாரணை 20 மணி நேரம் நீடித்தது.

கெவின் என்ற நபரிடம் இருந்து நடிகர் கிருஷ்ணா போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியது உறுதியானது. வாட்ஸ் அப் குழுக்களில் CODE WORD பயன்படுத்தி போதைப் பொருள் சம்மந்தமாக கருத்து பரிமாற்றங்களில் அதை உட்கொள்ளும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை கிருஷ்ணா பகிர்ந்துள்ளார். முன்னதாக கிருஷ்ணா இரத்த பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்படவில்லை என தகவல் கசிந்தது.

ஓஜி கஞ்சா பயன்படுத்திய கிருஷ்ணா ?

அறிவியல் பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் 26ஆம் தேதி கொக்கைன், ஓஜி கஞ்சா, மெத்து, எம்டிஎம்ஏ, ஓஜி கஞ்சா, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போன்களில் தகவல்களை அழித்திருந்தாலும் அதை காவல்துறையினர் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து மீட்டு போதைப் பொருள் பரிமாற்றத்தை கண்டுபிடித்தனர். போதைப்பொருள் கடத்துவது, உட்கொள்வது, மற்றவர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிந்தும் இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் சில நடிகர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP