கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 300 கோடியா ? ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு 50 கோடி கடன்

மாநிலங்களவை உறுப்பிரனாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நடிகர் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கலில் தனது சொத்து மற்றும் கடன் விவரங்களை பதிவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து கமல்ஹாசனின் சொத்து விவரங்கள் கிடைக்கப்பெற்றன.
image

உலக நாயகன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன விரைவில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதுவரை வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ஒலித்த கமல்ஹாசனின் குரல் இனி நாடாளுமன்றத்தில் ஒலிக்க போகிறது. ஜூலை மாதம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சை கேட்கலாம். வேட்பு மனு தாக்கலில் அவர் பகிர்ந்துள்ள அசையும் சொத்து, அசையா சொத்து, கடன் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் கமல்ஹாசனின் வருவாய்

70 வயதான கமல்ஹாசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் திரையுலகிலும், பிக்பாஸ் நிகழ்ச்சி, விளம்பரங்கள், இதர முதலீடுகள் வழியாக 140 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளார். 2020 முதல் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம், இந்தியன் 2, தக் லைஃப், கல்கி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசன் சில முக்கிய வசனங்களை பேசியிருந்தார். 2023-2024 நிதியாண்டில் 78 கோடியே 90 லட்சத்து 86 ஆயிரத்து 585 ரூபாயும், 2022 - 23 நிதியாண்டில் 9 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 984 ரூபாயும், 2021-22 நிதியாண்டில் 16 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 134 ரூபாயும், 2020 21 நிதியாண்டில் 18 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரத்து 115 ரூபாயும், 2019 - 2020 நிதியாண்டில் 22 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரத்து 10 ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளார்.

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு

ஆழ்வார் பேட்டை ஆண்டவரின் ஆசையும் சொத்து மதிப்பு 59 கோடியே 69 லட்சத்து 8 ஆயிரத்து 979 ரூபாயும், ஆசையா சொத்து மதிப்பு 245 கோடியே 86 லட்சத்து 31 ஆயிரத்து 250 ரூபாயும் என மொத்தமாக 300 கோடி ரூபாய் சொத்து உள்ளது. கடனாக அடமானம் உட்பட 49 கோடி 67 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். கையில் ரொக்கமாக 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், வங்கி சேமிப்பில் 29 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயும் வைத்துள்ளார். முதலீடுகள், பங்குசந்தை சேர்த்தால் அதில் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் உள்ளது. கடனாக 43 கோடியே 75 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

kamal hasan assets cars

கமல்ஹாசனின் கார்கள்

வேட்பு மனு தாக்கல் விவரப்படி கமல்ஹாசனிடம் நான்கு கார்கள் உள்ளன. பொலேரோ, பென்ஸ், பிஎம்டபிள்யு, லெக்ஸஸ் கார்களை மொத்தம் 8 கோடியே 43 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

ஆழ்வார்பேட்டை வீடு எவ்வளவு தெரியுமா ?

அசையா சொத்தில் வரும் விவசாய நிலத்தின் மதிப்பு 22 கோடியே 24 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ஆகும். கமலுக்கு சொந்தமான தொழில் கட்டடங்கள் மதிப்பு 111 கோடியே 12 லட்சம் ரூபாய் ஆகும். ஆழ்வார்பேட்டை வீட்டு மதிப்பு - 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். இடம் - 2 ஆயிரத்து 200 சதுர அடி. உத்தண்டி வீட்டு மதிப்பு - 90 ஆயிரம் சதுர அடி, கட்டப்பட்ட 15 ஆயிரம் சதுர அடியின் மதிப்பு 110 கோடி ரூபாய் ஆகும். கமல்ஹாசனிடம் 1.4 கிலோ தங்க நகைகள் உள்ளன. அவற்றின் 76 லட்சம் ரூபாய் ஆகும்.

மேலும் படிங்கவிஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன ? செலவு எவ்வளவு தெரியுமா ?

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP