தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர் விஜய் 2024ல் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சி தொடங்கி தலைவராக செயல்பட்டு வருகிறார். அரசியலில் பயணத்தில் விஜய் அடிக்கடி பொதுமக்களையும் சந்திக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கட்சி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கூடினர். அதே போல பரந்தூர் சென்றிருந்த போதும் ஆயிரக்கணக்கில் மக்கள் அணி திரண்டனர். பொது இடங்களுக்கு விஜய் செல்வதால் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது. இந்த நிலையில் உளவுத்துறை விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அளித்த தரவுகளை அடுத்து அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
Y+ பிரிவு பாதுகாப்பில் நான்கு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அப்பிரபலத்திற்கு பாதுகாப்பு வழங்குவார்கள். கூடுதலாக ஆறு காவல்துறையினரும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவார்கள். விஜய்க்கு வழங்கப்பட்டு இருக்கும் Y பிரிவு பாதுகாப்பில் எட்டு பாதுகாவலர்களும், ஒன்று அல்லது இரண்டு தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள். Y பிரிவு பாதுகாப்பு குழுவில் ஆயுதம் ஏந்திய காவலர்களும் இடம்பெறுவர். விஜயின் வீட்டிலும் தமிழகத்திற்குள் விஜய் செல்லும் இடங்களில் Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும். Y பிரிவு பாதுகாப்பு வழங்கிட ஒரு மாதத்திற்கு 12 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படும்.
ஏற்கெனவே சல்மான் கான், ஷாருக்கான், கங்கனா ரனாவத் ஆகியோருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதற்கு ஒரு மாதத்திற்கு 15 லட்சம் ரூபாய் செலவாகும். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மகாராஷ்டிரா அரசிற்கு ஷாருக்கான் கடிதம் எழுதியதையடுத்து அவருக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2020ல் நடிகை கங்கனா ரனாவத் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோடு ஒப்பிட்டு பேசியதால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. லாரன்ஸ் பிஸ்னாய் கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) February 2, 2025
மேலும், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நம் தலைமை நிலையச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஐம்பெரும்… pic.twitter.com/HkZTT5n2DU
பாதுகாப்பு வளையத்தில் விஜய்
இனி விஜயை சுற்றி எப்போதுமே ஆயுதம் ஏந்திய வீரர்கள் இருப்பார்கள். இந்தியாவில் குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர், பிரபலங்களுக்கு இது போன்ற பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவரை சுற்றி எப்போதுமே 180 பாதுகாவலர்கள் இருப்பார்கள். இந்தியாவில் அதிகப்படியான பாதுகாப்பு அமைப்பு என்றால் அது எஸ்.பி.ஜி அமைப்பு. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு எஸ்.பி.ஜி உருவாக்கப்பட்டது. நாட்டின் பிரதமர் உலகில் எங்கு சென்றாலும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது எஸ்.பி.ஜி-ன் கடமை. துணை ராணுவப்படையை சேர்ந்தவர்கள் எஸ்.பி.ஜி அமைப்பில் இருக்கின்றனர். Z+ பாதுகாப்பு மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கப்படும். குண்டு துளைக்காத 5 வாகனங்கள் மற்றும் 50 பேருக்கும் மேலான Z+ பாதுகாப்பு வழங்கிட ஒரு மாதத்திற்கு 33 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கு அடுத்து Z பாதுகாப்பு, X பாதுகாப்பு ஆகியவை உள்ளன.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation