ஃபேஷியல் ப்ளீச் செய்வதால் முகத்தை சுத்தப்படுத்தி அதிலிருந்து அழுக்குகளை வெளியேற்றி பிரகாசமாக இருக்க செய்யும். பல பிராண்டுகள் பொருட்கள் முக ப்ளீச்சிங் செய்ய விற்க்கப்படுகிறது ஆனால் அவை முகத்திற்கு தீங்கு விலைவிக்கும், அதில் அம்மோனியா நிரம்பியுள்ளதால் சருமத்தை கடுமையாக பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே எளிய வீட்டுப் பொருட்களைக் கொண்டு ப்ளீச்களை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கருமையான உங்கள் உதடுவை செக்கச்செவேல் என்று மாற்ற டிப்ஸ்!!
ஆரஞ்சு தோல்களை சேமித்து வெயிலில் காய வைத்து பின்னர் அதை மிக்ஸியில் அரைத்து மிக மெல்லிய தூள்களை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது தயிர் எடுத்து அதனுடன் ஆரஞ்சு தோல் பொடியை கலந்து கொள்ளவும். பின்னர் இதை உங்கள் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து முகத்தை காட்டன் துணியால் துடைத்து எடுக்கவும். வாரம் 2 முறை இப்படி செய்து வந்தால் சருமத்தில் பளபளப்பைத் தூண்டும். உங்கள் முகத்தில் துளைகளில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை வெளியேற்ற விரும்பினால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளி, வெள்ளரி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை சருமத்தை ஒளிரச் செய்யும். எனவே, இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ப்ளீச்சின் பயன்பாடு உங்களுக்கு உடனடியாக நல்ல மாற்றத்தை முகத்தில் கொடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியது தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாறு எடுக்க வேண்டும். பின்னர் அவை அனைத்தையும் சம அளவு எடுத்து கலக்கிக்கொள்ளுங்கள். பின்னர் சாற்றை முகத்தின் ஒவ்வொரு பகுதியாக தடவவும். அதை 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். உங்கள் முகத்தில் பளபளப்பைக் காண்பீர்கள்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தை வெண்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி உங்கள் சருமத்தை மாயாஜாலமாக மாற்ற நமது சமையலறை அலமாரியில் உள்ள மற்றொரு மாயாஜால மூலப்பொருள் தேன். எனவே இந்த ஃபேஷியல் ப்ளீச் செய்ய ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சில துளிகள் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து அகற்றவும். இந்த ஃபேஷியல் முக்த்தில் இருக்கும் துளைகளை ஆழமாக சுத்தம் செய்து சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அசுத்தங்கள் அனைத்தையும் வெளியேற்றி முகத்திற்கு பளபளப்பான பொலிவை தரும்.
இந்த ப்ளீச் செய்ய 2 டேபிள் ஸ்பூன் ஓட்மீல்லை அரைத்து பொடியை எடுத்துக்கொள்ளுங்கள், பின்னர் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். முகத்தை 15 நிமிடங்கள் கழித்து உலர் தேய்த்து கழுவவும். உங்கள் முகத்தில் பளபளப்பான நிறத்துடன் கூடிய சருமத்தை நீங்கள் பார்ப்பீர்கள்.
பாலில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகளும் மற்றும் எலுமிச்சை நிறத்தை அதிகரிக்கும் பண்புகளுடன் கூடிய மற்றொரு அற்புதமான முக ப்ளீச் செய்யலாம். 2 டேபிள் ஸ்பூன் புதிய பச்சை பாலில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சளுடன் கலக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: தலைமுடிக்கு வாழைப்பழத்தை பயன்படுத்துகிறீர்களா... உங்களுக்காவே இந்த உதவிக்குறிப்பு
பின் உங்கள் விரல்களை கொண்டு பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேஷியல் ப்ளீச்களுக்குப் பிறகு உங்கள் சருமம் மிகவும் பளபளப்பாகவும்வ்அழகாகவும் இருக்கும்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]