
வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதில் பொட்டாசியம் மட்டுமின்றி, பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகின்றது. இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இவற்றைப் பயன்படுத்தி முடியின் நுனியில் பிளவு, முடி உதிர்தல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்ற பல வகையான முடி பிரச்சனைகள் நீக்க முடியும்.
தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற விலையுயர்ந்த முடி சிகிச்சைகளை நீங்கள் நாடியிருக்கலாம். ஆனால் நீங்கள் சிக்கனமான முறையில் முடியை பராமரிக்க விரும்பினால் வாழைப்பழத்தைப் பயன்படுத்துங்கள். வாழைப்பழத்தின் உதவியுடன் ஹேர் மாஸ்க் செய்து அதை தடவவும்.
இந்த பதிவும் உதவலாம்: மார்கெட்டில் வாங்கும் க்ளென்சரை விட பல மடங்கு பலன் தரும் வீட்டு க்ளென்சர்

நீங்கள் வாழைப்பழ ஹேர் மாஸ்க் செய்யும் போது சரியான வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். பழுத்த வாழைப்பழங்கள் மென்மையாகவும், ஹேர் பேக் உருவாக்கப் பயன்படுத்தும்போது இது பேஸ்டாக செய்ய எளிதாக இருக்கும். பச்சை வாழைப்பழம் சரியாக மசிக்கப்படவில்லை என்றால் அதிலிருந்து ஹேர் மாஸ்க் தயாரிக்க கடினமாக இருக்கும்.
வாழைப்பழத்தைப் பயன்படுத்துவது முடிக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் ஹேர் மாஸ்கிலிருந்து அதிகபட்ச முடி பலனைப் பெற விரும்பினால் உங்கள் முடி வகைக்கு ஏற்ப ஹேர் மாஸ்க் தயார் செய்ய வேண்டும். உதாரணமாக உங்கள் தலைமுடி பலவீனமாகவோ அல்லது வறண்டதாகவோ இருந்தால் வாழைப்பழத்துடன் தேன் கலக்கவும். அதேபோல் முடி உதிர்வை போக்க வாழைப்பழத்துடன் முட்டையை கலந்து உபயோகிப்பது நல்லது.
வாழைப்பழத்தை மாஸ்க் செய்யும் போது வாழைப்பழத்தை நன்றாக மசிப்பது மிகவும் முக்கியம். வாழைப்பழ ஹேர் மாஸ்க் உருவாக்கும்போது சிறிய கட்டிகள் அதில் இருக்கும். இதற்குப் பிறகு அதை முடியில் தடவும்போது கட்டியை எடுத்து விட வேண்டும். பின் அதை நன்றாக கலக்க முயற்சிக்கவும் இதனால் பேஸ்ட் மென்மையாகவும், கட்டிகளற்றதாகவும் இருக்கும்.

வாழைப்பழ மாஸ்க் போடும் போதெல்லாம், முதலில் முடியை சுத்தம் செய்யுங்கள். மேலும் ஹேர் மாஸ்க்பயன்படுத்துவதற்கு முன் உங்கள் தலைமுடி சிதைந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது முடியில் ஹேர் மாஸ்க் போடுவதை மிகவும் எளிதாக்குகிறது.
வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை தலைமுடிக்கு தடவிய பின் போதுமான நேரம் அப்படியே விட்டுவிடுவது அவசியம். உதாரணமாக ஒரு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்திய பிறகு, அதை 20-30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். நீங்கள் இதை முடியில் குறைவாகவோ அல்லது அதிக நேரம் வைத்திருந்தால் மாஸ்க்கின் பலன் உங்களுக்குக் கிடைக்காது.
எனவே இப்போது நீங்கள் வாழைப்பழ ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது இந்த சிறிய குறிப்புகளை மனதில் வைத்து நீண்ட மற்றும் பட்டுப் போன்ற முடியைப் பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை சமளிக்க எளிய வழிகள்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]