herzindagi
pimple change  card

Monsoons Oily Skincare: மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை சமளிக்க எளிய வழிகள்

எண்ணெய் சருமம் மழைக்காலத்தில் மோசமாக இருக்கும் நிபுணர்கள் கூறும் இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணி பாருங்கள்
Editorial
Updated:- 2023-08-13, 01:59 IST

பருவமழை காலம் இனிமையான வானிலை என்றாலும், அதனுடன் ஈரப்பதத்தையும் தருகிறது. ஈரப்பதம் காரணமாக சருமம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த பருவத்தில் சருமத்தில் வெடிப்பு மற்றும் பருக்கள் பிரச்சனையும் கூடிவே வந்துவிடும். பல பெண்களின் சரும நிறம் கூட ஈரப்பதமான பருவத்தில் மந்தமாகிவிடும். அதனால்தான் மழைக்காலத்தில் சருமத்தை கூடுதல் கவனிப்பது மிகவும் முக்கியம். அழகு நிபுணர் பூனம் சுக் பருவமழை காலத்தில் சருமத்தை பராமரிக்க வழிகளை கூறியுள்ளார் 

 

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் சருமத்தை பராமரிக்க எளிய வழிகள்

முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்

muthani miiti site

தேவையான பொருள்கள்

  • 1 தேக்கரண்டி முல்தானி மிட்டி
  • 1 தேக்கரண்டி கடலை மாவு
  • 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாறு
  • 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர்
  • 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் முல்தானி மிட்டி, கடலை மாவு, உருளைக்கிழங்கு சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • இந்தக் கலவையை முகத்தில் தடவவும்.
  • பின் முகத்தை மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் விடவும்.
  • பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
  • இந்த பேக் பயன்படுத்திய பிறகு முகத்தில் ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

பச்சை தேயிலை தண்ணீர்  ஃபேஸ் பேக்

Tea site

தேவையான பொருள்கள்

  • 1 தேக்கரண்டி பச்சை தேயிலை நீர்
  • 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1 தேக்கரண்டி வெள்ளரி சாறு

செய்முறை

  • வெந்நீரில் க்ரீன்-டீ போட்டு ஆறியதும் அதில் ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் கலந்து கொள்ளவும்.
  • பின் காலையில் எழுந்தவுடன் இந்தக் கலவையைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யவும்.
  • இரவில் படுக்கும் முன் கூட இந்தக் கலவையை முகத்தில் தடவி தூங்கலாம்.
  • இது முகத்தை சுத்தப்படுத்தி துளைகளின் அளவையும் குறைக்கிறது.

அலோ வேரா ஜெல் ஃபேஸ் பேக்

தேவையான பொருள்கள் 

  • 1 டீஸ்பூன் அலோ வேரா ஜெல்
  • 1 வைட்டமின்-ஈ காப்ஸ்யூல்

செய்முறை

  • கற்றாழை ஜெல்லில் வைட்டமின்-ஈ காப்ஸ்யூலை துளைத்து அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையை இரவில் தூங்கும் முன் முகத்தில் தடவவும்.
  • காலையில் முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்
  • இதைப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் தோல்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் மேலும் அதிகப்படியான எண்ணெய் சுத்தம் செய்யப்படுகிறது.

காபி ஸ்க்ரப்

coffe srub site

தேவையான பொருள்

  • 1 தேக்கரண்டி பால்
  • 1 தேக்கரண்டி காபி

செய்முறை

  • காபி மற்றும் பால் கலக்கவும் அதை கலக்க வேண்டும்.
  • இந்தக் கலவையைக் கொண்டு முகத்தை மெதுவாக தேய்க்கவும்.
  • இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப்பை தினமும் 2 நிமிடம் பயன்படுத்தினால் நல்ல பலன்களைப் பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: 10 நாட்களில் கொத்து கொத்தாய் இருக்கும் முகப்பருக்கள் போக இப்படி ட்ரை பண்ணுங்க!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]