கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு அழகான கட்டம். கர்ப்பிணி பெண்களின் சருமத்தில் எப்போதும் மகிழ்ச்சியைக் காட்டாது! கர்ப்பம் சில ஹார்மோன் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. சில பெண்கள் வெளிர் நிறமாகவும் மந்தமாகவும் காணப்படுவர்கள். கர்ப்பகால ஹார்மோன் மாற்றம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் பொலிவோடு இருக்க சில வழிகள்.
இந்த பதிவும் உதவலாம்: அதிகப்படியான எடை கர்ப்பம் தரிக்க சிக்கலா இருக்கிறதா... இதை செய்து பாருங்கள்!
கர்ப்ப காலத்தில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தேவைப்படுவதால் தண்ணீரை குடிக்க வேண்டும். முகத்திற்கு இயற்கையான மற்றும் அழகான பளபளப்பு வேண்டுமெனில் உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டும். இது உங்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கும். உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது. வயிற்றில் இருக்கும் நல்ல அளவு தண்ணீர் உடலில் போதுமான அம்னோடிக் திரவத்தை உறுதி செய்யும். ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும்.
கர்ப்பம் தரித்த பின் உடற்பயிற்சி செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது கூட உடற்பயிற்சி செய்வது முக்கியம். கர்ப்பிணிப் பெண்களுக்கு சில உடற்பயிற்சிகள் நல்லது. மகப்பேறு யோகா மற்றும் தியானம் போன்றவை செய்ய வேண்டும். ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் செய்வது நல்லது.
கர்ப்பமாக இருக்கும் போது எப்போதும் சோர்வாகவும் சோம்பேறியாகவும் உணரலாம். இந்த நேரத்தில் நீங்கள் சரியாக ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் உடலுக்கும் மனதிற்கும் தூக்க இடைவெளி தேவை. இந்த நேரத்தில் நீங்கள் நன்றாக தூங்குவது முக்கியம்.
வரவிருக்கும் சிறு குழந்தைக்கு சரியான வளர்ச்சிக்கு சில அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை. ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் மூலம் உடலுக்கு எரிபொருளை அளிக்க வேண்டும். இந்த ஆரோக்கியமான பொருள் சருமத்தை பளபளக்கும்! இதனுடன், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இது உதவும்.
கர்ப்ப காலத்தில் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் கொண்டு வரலாம் ஆனால் நீங்கள் உங்களை கவனித்துக்கொள்வதை நிறுத்திவிடுவீர்கள். இந்த நேரத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவை! உங்கள் சருமமும் மென்மையாக இருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சருமத்திற்கு ஸ்க்ரப் செய்யுங்கள். தினமும் ஒரு நல்ல ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தைக் கழுவுவ வேண்டும். முகத்தில் இயற்கையான பளபளப்பிற்கு சில வீட்டு ஃபேஸ் பேக்குகளை தயார் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கர்ப்பம் என்பது எளிதான கட்டம் அல்ல, ஆனால் நீங்கள் அதை அனுபவிக்க வேண்டும்! நீங்கள் நன்றாக ஓய்வெடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் அதிக மன அழுத்தத்தை எடுக்காதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மகிழ்ச்சியாக இருங்கள் அது உங்கள் முகத்தில் தோன்றும்.
இந்த பதிவும் உதவலாம்: தாய்ப்பால் இல்லையா... தாய்ப்பால் சுரக்க சிறந்த உணவுகள் இதோ!!
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]