முகத்தின் அழகில் உதடுகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் இந்த உதடுகள் எப்போது கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ அப்போது முகத்தின் அழகும் மங்கத் தொடங்குகிறது. உதடுகளின் இந்த கருமையை மறைக்க பல்வேறு வகையான உதட்டுச்சாயங்களை முயற்சி செய்கிறோம். ஆனால் சில நேரங்களில் அது கூட வேலை செய்யாது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களும் அவற்றை குறைத்து உங்கள் உதடுகளை இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறமாக்கும். நீங்கள் அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தலைமுடிக்கு வாழைப்பழத்தை பயன்படுத்துகிறீர்களா... உங்களுக்காவே இந்த உதவிக்குறிப்பு
வெள்ளரிக்காய் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, எனவே உதடு சருமத்திற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா நிறைந்த கலவை சருமத்தை ஒளிரச் செய்யும்.
டிப்ஸ்: பயன்படுத்துவதற்கு முன் உதடுகளில் எந்த விதமான பொருளையும் தடவாதீர்கள்.
நீங்கள் இளஞ்சிவப்பு உதடுகளை விரும்பினால் பீட்ரூட் அதற்கு சிறந்த வீட்டு வைத்தியம். இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளஞ்சிவப்பு நிறத்தில் வைத்திருக்க உதவுகிறது. எனவே இதை உதடுகளுக்கு பயன்படுத்தலாம்.
உதடுகளின் கருமையை விரைவில் நீக்க வேண்டுமானால், இதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதுடன் மற்ற பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: மார்கெட்டில் வாங்கும் க்ளென்சரை விட பல மடங்கு பலன் தரும் வீட்டு க்ளென்சர்
குறிப்பு- மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றுவதற்கு முன் நீங்கள் சரும பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது, மேற்கண்ட முறைகள் உங்களுக்கு உடனடி பலன்களைத் தரும் என்று நாங்கள் கூறவில்லை. நீங்கள் ஒருமுறை உங்கள் தோல் நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும் பின்னர் அவற்றைப் பயன்படுத்தவும்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]