ஷாலினி ஸ்டோர்ஸ் கண்ணன், ரேஷ்மாவுக்கு என்ன ஆச்சு ? திரும்பி வர வாய்ப்பில்லையா

யூடியூப்பில் உள்ள தமிழ் சேனலில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட ஷாலினி ஸ்டோர்ஸில் கண்ணன், ரேஷ்மாவுக்கு பதில் ராஜேஷ், வைத்தீஸ்வரி நடித்து வருகின்றனர். 2-3 மாதங்களாக கண்ணன், ரேஷ்மா எந்த வீடியோவிலும் இடம்பெறவில்லை. அவர்கள் மீண்டும் ஷாலினி ஸ்டோர்ஸ் யூடியூப் சேனலுக்கு திரும்புவார்களா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
image

யூடியூப் சமூக வலைதள பக்கத்தில் எக்கச்சக்கமான தமிழ் சேனல்கள் உள்ளன. வில்லேஜ் குக்கிங் சேனல், விஜே சித்து, தமிழ் டாக்கிஸ், ஜம்ப் கட்ஸ் போல ரசிகர்களுக்கு பரிச்சயமான யூடியூப் சேனலில் ஷாலினி ஸ்டோர்ஸும் ஒன்று. 2023ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்த சேனலில் கண்ணன், ஷாலினி, குரு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். வாரத்திற்கு இரண்டு முறை சீரியல் போல 16-18 நிமிட வீடியோவும், தினமும் மாலை நேரத்தில் ஒரு ஷார்ட்ஸ் வீடியோவும் பதிவிடுவார்கள். மளிகை கடையில் நடக்கும் விஷயங்களை கலகலப்பாக தத்ரூபமாக நடித்து காட்டுவார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பாக ஷாலினி ஸ்டோர்ஸ் வீடியோவில் கண்ணன், ஷாலினி இடம்பெறுவது நின்றுபோனது. குரு, தீப்தி கொண்டு வீடியோக்கள் பதிவிடப்பட்டன. திடீரென கண்ணன் தம்பி, அவருடைய மனைவி என இரண்டு புதிய கதாபாத்திரங்கள் தோன்றி நடித்து வருகின்றனர். ஷாலினி ஸ்டோர்ஸ் யூடியூப் சேனலுக்கு கண்ணன், ரேஷ்மா திரும்ப வாய்ப்பு உள்ளதா ? இல்லையா ? என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

ஷாலினி ஸ்டோர்ஸ் கண்ணன் எங்கே ?

3.4 மில்லியன் அதாவது 34 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்ட ஷாலினி ஸ்டோர்ஸ் யூடியூப் சேனலில் 700க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட வீடியோக்களில் கண்ணன் கதாபாத்திரத்தில் விஜய், ஷாலினி கதாபாத்திரத்தில் ரேஷ்மாவும் நடித்திருந்தனர். திடீரென இருவரின் கதாபாத்திரமும் வீடியோக்களில் இடம்பெறவில்லை. இது குறித்து கண்ணன் தம்பி என நடித்துக் கொண்டிருக்கும் ராஜேஷ், மனைவி கதாபாத்திர வைத்தீஸ்வரி கூறுகையில் விஜய், ரேஷ்மா வெப் தொடர் மற்றும் சீரியலில் நடிக்க சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். விஜய் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் வெப் தொடரில் நடித்து வருகிறார். ரேஷ்மா சக்திவேல் - தீயாய் ஒரு தீராக்காதல் மற்றும் விஜய் டிவியில் அய்யனார் துணை தொடரில் நடித்து வருகிறார். இருவரும் ஆல் இன் ஆல் அழகுராஜாவிலும் இணைந்து பணியாற்றுகின்றனர். இதனால் இருவரும் ஷாலினி ஸ்டோர்ஸ் சேனலுக்கு திரும்பும் வாய்ப்பு குறைவே.

ராஜேஷ், வைத்தீஸ்வரியை ரசிகர்கள் ஏற்றனரா ?

சின்ன அண்ணன், சின்ன அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ராஜேஷ், வைத்தீஸ்வரி ஏற்கெனவே நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் நடித்துள்ளனர். தொடக்கத்தில் கண்ணன், ஷாலினி எங்கே என ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் கேட்டாலும் அதன் பிறகு 2 மாதங்களாக வெளியாகும் ஷார்ட்ஸ் வீடியோவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. டிவி சீரியலில் இவருக்கு பதில் இவர் என காண்பித்தால் ரசிகர்கள் ஏற்றுவிடுவார்கள். எங்களுக்கு எதிர்ப்பு வரவில்லை எனினும் சற்று பயம் இருந்ததாகவும் தற்போது ஆதரவு பெருகி வருவதாகவும் ராஜேஷ், வைத்தீஸ்வரி கூறினர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP