அனி ஐ.வி.சசி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள உப்பு கப்புரம்பு திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது. தெலுங்கு படமாக எடுத்து டப்பிங் செய்து பிற மொழிகளில் வெளியிட்டுள்ளனர். சுஹாஸ், ரமேஷ்வரி, பாபு மோகன் இப்படத்தில் நடித்துள்ளனர். அகஸ்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வாருங்கள் உப்பு கப்புரம்பு விமர்சனத்தை பார்ப்போம்.
உப்பு கப்புரம்பு கதைச்சுருக்கம்
சிட்டி ஜெயபுரம் என்ற கிராமத்தில் பொதுமக்களை புதைப்பதற்கு இடமில்லாமல் போகிறது. தந்தையின் இறப்பாக கிராம தலைவராகும் கீர்த்தி சுரேஷ் அப்பிரச்னையை எப்படி சமாளிக்கிறார் என்பதே உப்பு கப்புரம்பு படத்தின் கதை.
உப்பு கப்புரம்பு விமர்சனம்
சிட்டி ஜெயபுரம் கிராமத்தின் தலைவரான கீர்த்தி சுரேஷின் தந்தை மறைவுக்கு பிறகு பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. திக்கு திசை தெரியாமல் கிராமத்தின் பிரச்னைகளுக்கு குழப்பமாக பதில் சொல்லி சமாளிக்கிறார். இப்போது கிராமத்தின் ஈடுகாட்டில் புதைப்பதற்கு இடமில்லை என்ற பிரச்னை எழுகிறது. வேறு இடத்தில் புதைத்தால் கிராமத்திற்கு ஆபத்து என மூடநம்பிக்கையோடு கிராம மக்கள் இருக்கின்றனர். இப்பிரச்னையை கீர்த்தி சுரேஷ் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதை கலகலப்பாக சொல்ல முயன்றுள்ளனர்.
உப்பு கப்புரம்பு படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- சுஹாஸ், ரமேஷ்வரி படத்திற்கு தேவையான மீட்டரில் நடித்துள்ளனர்.
- கிராமங்களில் தற்போதும் நிலவும் ஈடுகாடு பிரச்னையை படமாக எடுத்ததற்கு பாராட்டுகள். இறுதியில் நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் என கிராம மக்களுக்கு உணர்த்திய காட்சி நன்றாக இருந்தது.
உப்பு கப்புரம்பு படத்தின் நெகட்டிவ்ஸ்
- கீர்த்தி சுரேஷ் பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார். தமிழ் தெரிந்தும் படத்திற்கு டப்பிங் செய்தாரா என சந்தேகிக்கும்படி பேசும் விதம் உள்ளது.
- முதல் பாதியில் நமது பொறுமையை மிகவும் சோதிக்கின்றனர். நகைச்சுவை என்ற பெயரில் அவர்களே பேசி சிரித்து நம்மை வெறுப்பு ஏற்றுகின்றனர்.
- டப்பிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம். திடீரென தெலுங்கு மொழி பேசுகின்றனர்.
- நல்ல கதையை திரைக்கதையில் விரிவுப்படுத்த தெரியாமல் சொதப்பியுள்ளனர்.
உப்பு கப்புரம்பு ரேட்டிங் - 2.5 / 5
திரையங்குகளில் வெளியாகி இருந்தால் கீர்த்தி சுரேஷிடம் இருந்து மற்றொரு ரகு தாத்தாவாக மாறியிருக்கும். ஓடிடி வெளியீடு என்பதால் படம் ஓரளவு தப்பிவிட்டது. அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மகாநதி போன்ற படத்தில் மீண்டும் எப்போது நடிப்பாரா ?
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation