குக் வித் கோமாளி : எலிமினேஷனுக்கு தள்ளப்பட்ட ராஜு; செஃப் ஆப் தி வீக் யார் தெரியுமா ?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர் ராஜு ஜெயமோகன் குறைவான மதிப்பெண் பெற்று டேஞ்சர் ஸோனுக்கு தள்ளப்பட்டார். இந்த வாரம் செஃப் ஆப் தி வீக் பெற்ற போட்டியாளர் நடுவர்களிடம் இருந்து 30 புள்ளிகளை அள்ளினார்.
image

குக் வித் கோமாளி ஆறாவது சீசன் அமர்க்களமாக அமோகமாக ஒவ்வொரு வாரமும் நகைச்சுவை விருந்து அளிப்பதோடு கேள்விப்படாத உணவுகளை காண்பித்து அவற்றை ருசிக்கும் வாய்ப்பை தருகிறது. குக் வித் கோமாளியில் இந்த வாரம் ஸ்ட்ரீட் ஃபுட் வாரமாக அறிவிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டியாளர் ஒருவர் 30 புள்ளிகளை பெற்று செஃப் ஆப் தி வீக் தட்டிச் சென்றார்.நிகழ்ச்சியில் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் பறந்து போ படக்குழு இயக்குநர் ராம், நடிகை அஞ்சலி, நடிகர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

குக் வித் கோமாளியில் பறந்து போ டீம்

இந்த வாரம் போட்டியாளர்களை கோமாளிகளுடன் பேரிங் செய்வதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. புகழ் போன்ற கோமாளிகள் திட்டமிட்டு சிலருடன் பேரிங் செய்வதை தடுத்திட யார் யாரை தேர்வு செய்கின்றனர் என்பதை அறியாமல் இருக்க டிஜிட்டல் ஸ்க்ரீன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. லட்சுமி ராமகிருஷ்ணன் - சுனிதா, ராஜு ஜெயமோகன் - ராமர், மதுமிதா - சவுந்தர்யா, உமர் - டைகர் தங்கதுரை, பிரியா ராமன் - குரேஷி, சுந்தரி அக்கா - சரத், ஷபானா - புகழ், பிரியா ராமன் - குரேஷி, விவசாயி நந்தகுமார் - சர்ஜுன் இணைந்தனர். அதிக பானி பூரி சாப்பிடும் கோமாளியுடன் இணைந்த போட்டியாளர் அட்வாண்டேஜ் டாஸ்க் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதில் டைகர் தங்கதுரை, குரேஷி அதிக பானி பூரி சாப்பிட்டு இருந்தனர். அதன்படி அட்வாண்டேஜ் டாஸ்க் உமர், பிரியா ராமனுக்கு கிடைத்தது. இவர்கள் இருவரும் ஷபானா, மதுமிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், சுந்தரி அக்காவை தேர்வு செய்து 10-15 பேருக்கு சமைக்கும்படி அறிவுறுத்தினர்.

செஃப் ஆப் தி வீக் மதுமிதா

போட்டியாளர்கள் சமைக்க 2 மணி நேரம் வழங்கப்பட்டது. இடையூறுடன் சமைப்பதற்கு போட்டியாளர்களை பாட்ஷா படத்தில் ரஜினியை கட்டி வைத்து அடிப்பது போல கம்பத்தில் கட்டிவிட்டனர். நடுவே பறந்து போ படக்குழுவும் போட்டியாளர்கள், கோமாளிகளுடன் இணைந்து பேசி மகிழ்ந்தனர். நடிகை அஞ்சலி கோமாளி புகழிடம் சிக்காமல் அவரை வெறுப்பு ஏற்றினார். மதுமிதா மலேசியன் ஸ்ட்ரீட் ஃபுட் ஓடக் ஓடக் ( Otak otak ) சமைத்திருந்தார். மீன் வைத்து செய்யக்கூடிய உணவை மதுமிதா இறால் வைத்து சமைத்தார். இதற்கு மூன்று நடுவர்களும் அவரை புகழ்ந்து தள்ளினர். உமருக்கு 27 புள்ளிகள் கிடைத்தது. கொரியன் கிம்ச்சி சமைத்து விவசாயி நந்தகுமார் மூன்றாம் இடம் பிடித்தார். 4வது இடத்தை ஷபானா, 5வது இடத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், 6வது இடத்தை பிரியா ராமன் பெற்றனர். குறைவான புள்ளிகள் பெற்ற ராஜு ஜெயமோகன், சுந்தரி அக்கா டேஞ்சர் ஸோனுக்கு தள்ளப்பட்டனர். ராஜு வேலூர் மீன் சேமியாவும், சுந்தரி அக்கா ஆட்டுக்கால் பாயா, இடியாப்பம் செய்திருந்தனர். இதனால் எலிமினேஷன் விழிம்புக்கு ராஜு சென்றுள்ளார்.

30 புள்ளிகளை பெற்று மதுமிதா செஃப் ஆப் தி வீக் விருதை தட்டிச் சென்றார். அவருக்கு தங்க நிற சமையல் தொப்பியும் அணிவிக்கப்பட்டது. அடுத்த வாரம் அநேகமாக எலிமினேஷன் குக்கிங் இருக்கலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP