குக் வித் கோமாளி : பருப்பில் பீட்ஸா செய்து அசத்திய பிரியா ராமன், தலைகீழாக மாறும் எலிமினேஷன்

இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர் நந்தகுமார் செய்த நாவல் பழ சட்னியை நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் வெகுவாக பாராட்டி தனது விருந்து மெனுவில் சேர்த்துக் கொண்டார். பத்து நிமிட இடையூறுக்கு மத்தியிலும் பிரியா ராமன் அசத்தலாக சமைத்து செஃப் ஆப் தி வீக் விருதை வென்றார்.
image

குக் வித் கோமாளி ஆறாவது சீசனில் மூன்றாவதாக வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழந்தைகளை மையப்படுத்தியதாக இருந்தது. குழந்தைகளுக்கு பிடித்தமாக மைதா, சர்க்கரை இல்லாமல் ஆரோக்கியமாக சமைக்க போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் குழந்தைகள் ஃபேரிங் செய்து வைத்தனர். இந்த வாரம் செஃப் ஆப் தி வீக் வென்றது யார் தெரியுமா ?

குக் வித் கோமாளியில் குழந்தைகள்

போட்டியாளர்களிடம் தகவல் பெற்று குழந்தைகள் கோமாளிகளை தேர்வு செய்து ஃபேரிங் செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த கோமாளிகளை தேர்வு செய்து போட்டியாளர்களின் எதிர்பார்ப்பில் இடியை இறக்கினர். ஷபானாவுடன் சுனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனுடன் செளந்தர்யா, நந்தகுமாருடன் புகழ், உமருடன் குரேஷி, சுந்தரி அக்காவுடன் டைகர் தங்கதுரை, பிரியா ராமனுடன் டோலி ஃபேரிங் செய்யப்பட்டனர். மதுமிதா ஆசைப்படியே ராமரும், ராஜு விருப்பபடி சர்ஜுனும் கிடைத்தனர். அட்வாண்டேஜ் டாஸ்க்கில் அதிக வடிவங்களில் தோசை சுட்டு விவசாயி நந்தகுமாரும், உமரும் வென்றனர்.

செஃப் ஆப் தி வீக் பிரியா ராமன்

குழந்தைகளை போட்டியாளர்களும், கோமாளிகளும் இடுப்பில் சுமந்தபடி மாறி மாறி சமைக்க வேண்டும். அட்வாண்டேஜ் டாஸ்க் வென்ற உமர், நந்தகுமார் திட்டமிட்டு முதல் ஒரு மணி பிரியா ராமனை பத்து நிமிடங்கள் சமைக்கவிடாமல் செய்தனர். இரண்டாவது ஒரு மணி நேரத்தில் சுந்தரி அக்கா, மதுமிதாவிடம் இருந்து தலா ஐந்து நிமிடங்கள் சமைக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. இம்முறை போட்டியாளர்களின் சமையலுக்கு நான்கு குழந்தைகளும் மதிப்பெண் வழங்கினர்.

இதில் போட்டியாளர் பிரியா ராமன் ராகி கேக், மசூர் பருப்பில் பீட்ஸா செய்து அசத்தினார். அப்போது தன்னுடைய குழந்தை சிறப்பு குழந்தை என குறிப்பிட்டார். நந்தகுமாரின் நாவல் பழ சட்னிக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பாராட்டு தெரிவித்து சமையல் குறிப்பு பெற்று விருந்து மெனுவில் சேர்த்துக் கொண்டார். இறுதியாக செஃப் ஆப் தி வீக் விருது பிரியா ராமனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை உமர் லத்தீப் பிடித்தார். மூன்றாம் இடத்தை ராஜு, நான்காம் இடத்தை நந்தகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா பகிரந்து கொண்டார். சுந்தரி அக்கா, மதுமிதா ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களுக்கு தள்ளப்பட்டனர். ஆரோக்கியமான உணவு என அறிவுறுத்திய பிறகு ராஜு நூடுல்ஸ் செய்திருந்தார். நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவா ? ஒட்டுமொத்தமாக இரண்டு வாரங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கடைசி இரண்டு இடங்களில் ராஜு, சுந்தரி அக்கா தொடர்கின்றனர். அடுத்த வாரம் இந்த இரண்டு பேரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP