"சுனிதா அப்படியே போயிடுங்க" பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் இந்த வாரம் எலிமினேஷனில் வாக்குகள் அடிப்படையில் சுனிதா வெளியேற்றப்பட்டுள்ளார். சாச்சனாவும், அன்ஷிதாவும் மயிரிழையில் தப்பியுள்ளனர். வீட்டில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளது.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் 4 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் 3 பேர் வெளியேற்றப்பட்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஆறு பேர் என்ட்ரி கொடுத்ததால் வீட்டின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்தது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 8வது சீசனின் முதல் நாளிலேயே சாச்சனா சக போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு சீக்ரெட் ரூமில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தார். முதல் வாரத்தில் ஃபேட் மேன் ரவீந்தரும், இரண்டாவது வாரத்தில் அர்னவும், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தாவும் வெளியேற்றப்பட்டனர். 4வது வாரத்திலும் எலிமினேஷன் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நோ எவிக்‌ஷனை விஜய் சேதுபதி அறிவித்து போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டுவதாக ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார். இந்த நிலையில் 5வது வாரத்தில் குக் வித் கோமாளி புகழ் சுனிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளர்.

பிக்பாஸில் சுனிதா வெளியேற்றம்

இந்த வார நாமினேஷனில் அருண், முத்துக்குமரன், ரஞ்சித், தீபக், விஷால், பவித்ரா, சாச்சனா, ஆனந்தி, சுனிதா, அன்ஷிதா, ஜாக்குலின் என 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். டாஸ்க்கில் வென்ற பாஸ் வைத்து தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி நடிகர் ரஞ்சித்தை ஆண் போட்டியாளர்கள் காப்பாற்றினர். மேலும் சில தளங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சாச்சனா, அன்ஷிதா, சுனிதா கடைசி மூன்று இடங்களில் இருந்தனர். இறுதி நேரத்தில் சாச்சனாவின் இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு வாக்களிக்குமாறு அட்மின் கேட்டுக் கொண்டதால் வாக்குகள் சற்று அதிகரித்தன. இதையடுத்து அன்ஷிதா, சுனிதா ஆகியோரில் ஒருவர் வெளியேறுவது உறுதி என ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்ற சுனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து விஜய் சேதுபதியால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் சுனிதாவின் பயணம்

குக் வித் கோமாளி, நடன நகிழ்ச்சிகளில் இருந்த சுனிதாவை பிக்பாஸ் வீட்டில் பார்ப்பதற்கு வேறு மாதிரியாக இருந்தது. சுனிதா தனக்கு தமிழ் தெரியாத எனக் கூறினாலும் வீட்டில் பிரச்னை வரும் போது வார்த்தைகளை தெளிவாக பயன்படுத்தி சண்டையிட்டது கேள்விக் குறியை எழுப்பியது. கில்லர் காயின் டாஸ்க்கில் முத்துக்குமரனிடம் மல்லுக்கட்டியதற்கு சுனிதாவை நிச்சயம் பாராட்டலாம். ப்ரோமோவிலும் சுனிதா வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஒருவரான வர்ஷினியை பார்த்து எதுக்குடா வந்தீங்க அப்படியே போயிடுங்க என கூறுவது ஒளிபரப்பட்டது. அது சுனிதாவிற்கே ரிவீட்டாக மாறியுள்ளது.

மேலும் படிங்கபிக்பாஸ் வீட்டிற்கு தர்ஷா குப்தா குட் பை! எலிமினேஷனில் ட்விஸ்ட்

பிக்பாஸ் போட்டி குறித்த அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP