பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் ஆண்கள் Vs பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களோடு துவங்கியது. முதல் வார எவிக்ஷனில் ஃபேட் மேன் ரவீந்தர், இரண்டாவது வார எவிக்ஷனில் அர்னவ் ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்றதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். முதல் நாளில் சாச்சனா சக போட்டியாளர்களால் வீட்டை விட்டு வெளியேற்றபட்டாலும் சீக்ரெட் ரூம் சென்று அந்த வாரமே மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இரண்டு வாரங்களும் பெண்கள் அணியினர் டாஸ்க் மூலமாக தங்களுக்கு பிடித்தமானவர்களை காப்பாற்றினர். மூன்றாவது வார நாமினேஷனில் ஆண் போட்டியாளர்களில் சத்யா, முத்துக்குமரன், அருண் மற்றும் பெண் போட்டியாளர்களில் ஜாக்குலின், அன்ஷிதா, சவுண்ட் சவுந்தர்யா, பவித்ரா, தர்ஷா குப்தா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று தர்ஷா குப்தா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் தர்ஷா குப்தா எலிமினேஷன்
இந்த வாரம் முழுக்க ஹோட்டல் டாஸ்க் நடைபெற்ற நிலையில் தர்ஷா குப்தா தன்னைக் காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு பெரியளவு எதுவும் செய்யவில்லை என பிக்பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் ஆண்கள் அணியிடமும் பெண்கள் அணியிடமும் மாற்றி மாற்றி பொய் பேசிவிட்டு எதுவும் தெரியாதது போல் நடித்தார். ஜெஃப்ரி உள்ளிட்ட சிலர் தர்ஷா குப்தாவின் பொய்களை போட்டு உடைத்தனர்.
பிக்பாஸில் தர்ஷா குப்தா
தர்ஷா குப்தாவின் செயல்களை பார்த்து இவருக்கு இவ்வளவு நடிப்பு திறமை உள்ளதா என ரசிகர்கள் அதிர்ந்தனர். இந்த வாரமும் முதல் ஆளாக சவுண்ட் சவுந்தர்யா காப்பாற்றப்பட்டார். கடந்த சீசன் போட்டியாளர் விஷ்ணுவின் நண்பரான இவர் ஆன்லைன் வோட்டிங்கிற்கு மிகப்பெரிய டீமை செட் செய்துவிட்டு வீட்டிற்குள் வந்திருக்கலாம் என இணையத்தில் பேசப்படுகிறது. இறுதியாக எவிக்ஷன் கார்டில் தர்ஷா குப்தாவின் பெயரை காண்பித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து அவரை வெளியேற்றினார் விஜய் சேதுபதி.
மேலும் படிங்கபிக்பாஸ் தமிழ் : முதல் வார எவிக்ஷனில் 6 போட்டியாளர்கள்; ஜாக்குலின் டூ ரஞ்சித்
ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பபடும் போது வீட்டிற்குள் அவர்களுடைய பயணத்தின் சிறப்பு வீடியோ ஒளிபரப்பு செய்யப்படும். தர்ஷா குப்தாவின் பிக்பாஸ் பயண வீடியோவில் அவருடைய பயங்கரமான சிரிப்பு, பாய்ஸ் டீமிடம் சொன்ன பொய்கள், சாப்பாட்டு விஷயத்தில் மாற்றி மாற்றி பேசியது, காலை நடனம், லுங்கி அணிந்து செய்த ரேம்ப் வாக் ஆகியவை இடம்பெற்றிருந்தன. சமூக வலைதளங்களில் அதிகளவு பின் தொடர்பவர்களை கொண்ட தர்ஷா குப்தா எப்படி குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார் என ரசிகர்கள் சிந்திக்கின்றனர்.
எது எப்படியோ வழக்கம் போல் மீண்டும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
இதுபோன்ற பிக்பாஸ் அப்டேட்களுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation