விநாயகர் சதுர்த்திக்கு என்பது இந்துகள் வீடுகளில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகைக்கு பல வடிவங்களில் பிள்ளையாரை வைத்தி வழிப்பாடுவார்கள் மக்கள். குறிப்பாக பல கணபது, வீர கணபது, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஷிப்ர கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மற்றும் மகா கணபதி, இது போன்ற பல வகையாக விநாயகரை வாங்கி மக்கள் வீட்டில், கோவிலில், வேலை செய்யும் இடங்களில் மற்றும் அலுவலங்களில் வைத்து வழிபடுவார்கள்.
மக்கள் விநாயகர் சதுர்த்தை கொண்டாடும் முறையில், அவர் இருக்கும் இடத்தையும் அழகிய பந்தல் அமைத்து அதில் ராஜாவாக அமர வைப்பார்கள். குறிப்பாக, மக்கள் தனக்கு பிடித்த வகையில், பக்தியை வெளிக்காட்டும் வகையில் பிள்ளையாருக்கு ராஜா அலங்காரத்தை செய்வார்கள். எளிமையான மக்களும் இருப்பதை வைத்து விநாயகர் அமரக்கூடிய பந்தலை வடிவமைப்பார்கள். அப்படி அமைக்கக்கூடிய சில பந்தல் வகைகளை பார்க்கலாம்.
வெள்ளை பூக்கள் பந்தல் ஆலங்காரத்தில் சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறார் பிள்ளையார். தமிழக மக்கள் இந்த அலங்காரத்தை செய்ய நமக்கு தெரிந்த பூக்களான வெள்ளை ரோஜா இதழ்கள், சம்பங்கி பூக்களை எடுத்துக்கொள்ளலாம். பந்தல் அமைக்க மேல்புத்தில் அருகம்புல்லை பயன்படுத்தலாம். இப்படி உங்கள் பந்தலை அமைத்தால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பிள்ளையாருக்கு சரியான தேர்வாக இருக்கும்.
பிள்ளையாருக்கு சாமந்தி மலர்களை கொண்டு அழகான பந்தல் அமைக்கலாம். இதற்கு முதலில் சாமந்தி மற்றும் சிவப்பு ரோஜாவை எடுத்த மாலையாக கட்டுக்கொள்ள வேண்டும். விநாயகர் வைக்கவேண்டிய பின்புறத்தில் நில நிற துணி மைத்து, அதில் மல்லி பூக்களை கொண்டு தோறனம் அமைக்க வேண்டும். சமந்து மாலையை பிள்ளையாருக்கு பந்தல் போன்று அமைக்க வேண்டும்.
மேலும் படிக்க: 100 பெண் குழந்தைகளுக்கான அழகிய மற்றும் புதுவிதமாக முருகன் தமிழ் பெயர்களை பார்க்கலாம்
விநாயகர் வைக்க வேண்டிய பின்புறத்தில் மல்லி பூக்களை கொண்டு வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். மல்லி பூக்களின் மையப்பகுதியில் தங்க நிற மணிகளை கொண்டு அழகுப்படுத்தலாம். பின்னர் பந்தல் அமைக்க பல வண்ண வடிவ ரோஜாக்களை எடுத்து, அதனுடன் ஜிப்சி பூக்கள் மற்றும் இலைகள் கொண்டு அமைக்கலாம்.
மேலும் படிக்க: பிள்ளையார் சதுர்த்தி நாளில் பல பெயர்களாடு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விநாயகர்.!
மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ண சாமந்தி பூக்களை வைத்து செய்யக்கூடிய இந்த பந்தல் எளிமையாது மற்றும் அழகாக இருக்கும். பிள்ளையாருக்கு பின் புறத்தில் வெள்ளை நிற துணியை கொண்டு அழகுப்படுத்த வேண்டும். பின்னர் இரண்டு நிற சாமந்திகொண்டு பந்தல் அமைக்க வேண்டும். இது பார்க்க மங்களகரமாக தோன்றும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]