யானை தந்தம், தொப்பை வயிறோடு முதன்மை கடவுளாக தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து வருகிறார் விநாயகர். எந்த தொழிலைத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிப்பார்கள். அந்தளவிற்கு ஒவ்வொரு மக்களின் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். அனைத்து நாட்களிலும் விநாயகரை நினைத்து வழிபட்டாலும், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது. 2025 ல் ஆகஸ்ட் 27 ஆம் நாள் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடவுள்ளது. இந்நேரத்தில் விநாயகரின் பல சுவாரஸ்சிய பெயர்கள் குறித்த விபரங்களை விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
ஏகதந்தாய வத்ருதுண்டாய தீமகே என்ற பாடலை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆம் விநாயகரை வழிபடும் போதும் பாடும் பாடலில் இதுவும் உண்டு. பிள்ளையாருக்கு ஏகதந்தா என்ற பெயரும் உண்டு. ஏகதந்தா என்பது ஒற்றை தந்தம் கொண்டவர் என்று பெயர். புராணத்தின் படி விஷ்ணுவின் அவதாரமான பரசுராமருடன் நடந்த போரில் விநாயகர் தனது தந்தங்களில் ஒன்றை இழந்தார் என கூறப்படுகிறது.
யானைக் காதுகளைக் கொண்டவர் என பொருட்படக்கூடிய கஜகர்ணன் என்ற பெயரும் விநாயகருக்கு உள்ளது. பெரிய மற்றும் தனித்துவமான காதுகள் பக்தர்களின் பிராத்தனைகளையும், துயரங்களையும் கவனமாக கேட்கும் திறனைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி தினத்தில் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள்
இரண்டு கைகள் அல்ல 8 கரங்களைக் கொண்டு காட்சியளிக்கும் விநாயகருக்கு தருண கணபதி என்ற பெயரும் உண்டு. தனது கைகளில் பாசம், அங்குசம், கரும்புத் துண்டு, ஒடிந்த தந்தம், மோதகம், விளாம்பழம் போன்றவற்றை கையில் ஏந்தியிருப்பார். இவரை நினைத்து வழிபட்டால் அனைத்தும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
10 அல்லது 16 கரங்களைக் கொண்டு காட்சியளக்கும் வீர கணபதி சிவந்த திருமேனியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்த துன்பங்கள் வந்தால் தங்களது கையில் உள்ள வேதாளம், வேல் வில் , சக்கரம், கத்தி, கேடகம் சம்மட்டி, நாகம், மழு, கொடி போன்ற 16 பொருள்களை கையில் ஏந்தியிருக்கும் இந்த கணபதியை மன முருகி வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும்.
மேலும் படிக்க: சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விருந்து படைக்க இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க
இதே போன்று ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஹேம கணபதி, தும்ரகேது, விநாயக், கணேஷர், லம்போதர், விக்னேஷ் போன்ற பல பெயர்களைக் கொண்டிருப்பவர் தான் முதன்மைக் கடவுளான விநாயகர். இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் அல்லது கோயில்களுக்குச் சென்று வழிபட்டு விநாயகரை அருளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.
Image credit - Pexels
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]