herzindagi
image

விநாயகர் சதுர்த்தி தினத்தில் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள்

முதன்மை கடவுளாகப் போற்றப்படும் விநாயகரை மனமுருகி வழிபடுபவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என ஆன்மீக வாதிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.  
Editorial
Updated:- 2025-08-25, 14:24 IST

இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவரித்த நாளை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாளாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு வருகின்ற ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதாவது புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி தினம் வெகு விமர்சியாக உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. வட இந்தியாவைப் பொறுத்தவரை 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். வீடுகளில் 10 நாட்களுக்குக் கொண்டாடுவது என்பது முடியாத காரியம். விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டும் சிறப்பாக கொண்டாடினால் போதும். இந்த நாளில் விநாயகரின் முழுமையாக அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்? வழிபாட்டு முறைகள் என்னென்ன? என்பது குறித்த விரிவானத் தகவல்கள் இங்கே.

 

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள்:

  • வீடுகளில் விநாயகர் சதுர்த்தி தின விழாவைக் கொண்டாட வேண்டும் என்று நினைத்தால், முந்தைய நாள் வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தம் செய்து விட வேண்டும். குறிப்பாக பூஜை அறைகளை சுத்தம் செய்து விட்ட பின்னதாக, சாமி புகைப்படங்களை துடைத்து சந்தனம் மற்றும் குங்குமம் வைக்கவும்.
  • ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 11 மணி முதல் 1.40 மணி வரை நல்ல நேரம் என்பதால் உங்களுக்கு நேரம் இருக்கும் சமயத்தில் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது. இது தான் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரமாக உள்ளது.

மேலும் படிக்க: கோவிலில் பெண்கள் தேங்காய் உடைக்க கூடாது ஏன் தெரியுமா? என்னென்ன கஷ்டங்கள் வரும்?

விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகரின் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது விதவிதமான சிலைகள் வந்திருந்தாலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வைத்து தான் வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும். எப்படி பூஜைகள் அனைத்தும் முடிந்த பின்னதாக சிலையை தண்ணீரில் கரைக்கிறோமோ? அது போன்று அனைத்துத் துன்பங்களும் கரைந்துப் போகும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் படிக்க: Varalakshmi Vratam 2025: மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை!

பூஜை அறைகளில் மண் சிலையை வைத்து வழிபடும் போது சந்தனம், குங்குமம் வைப்பதோடு, வயிற்றுப் பகுதியில் காசு வைத்து வழிபட வேண்டும். பிள்ளையாருக்குப் பிடித்த வெள்ளை எருக்கலைப் பூ மற்றும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது. இதற்கு அடுத்தப்படியாக பூரண கொழுக்கட்டை,சுண்டல், வடை போன்ற பிரசாதங்களைப் படைத்து வழிபடவும். இதுபோன்ற வழிபாடுகளைப் பின்பற்றி விநாயகரை இந்த சதுர்த்தி தினத்தில் வழிபட்டு நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யவும்.

Image credit - Pexels

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]