herzindagi
chicken recipe without oil diet friendly

Zero Oil Diet Chicken : எண்ணெய் சேர்க்காமல் சுவையான டயட் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

சிக்கனின் முழு ஊட்டச்சத்துக்களையும் பெற வேண்டுமா? இதற்கு உதவக்கூடிய எண்ணெய் சேர்க்காத சிக்கன் கிரேவி ரெசிபியை இன்றைய பதிவில் பார்க்கலாம்… 
Editorial
Updated:- 2023-04-20, 09:32 IST

மீன், இறைச்சி போன்ற உணவுகளை பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக குழம்பில் சேர்த்து சாப்பிடும்படி மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் சமையலுக்கும் குறைவான அளவு எண்ணெயை படுத்துவதே நல்லது.

உடலுக்கு கொழுப்பு அவசியம்தான், ஆனால் அது ஆரோக்கியமான கொழுப்பாக இருக்க வேண்டும். எனவே ஆரோக்கியமற்ற கெட்ட கொழுப்புகள் உள்ள உணவுகளை தவிர்த்திடுங்கள். புரதம் நிறைந்த சிக்கனை வறுத்தாலோ அல்லது பொரிக்க செய்தாலோ அதன் சத்துக்களை இழக்க நேரிடலாம். இதை தடுக்க சிக்கனை வறுப்பதற்கு பதிலாக இதுபோன்ற கிரேவியை செய்து சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காத இந்த அற்புதமான சிக்கன் கிரேவியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக உடல் எடை மற்றும் உணவு முறையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி நிச்சயம் உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை சட்டுனு குறைய பச்சை பயறு சாலட் செய்து சாப்பிடுங்க

சிக்கனை ஊற வைக்கும் முறை

healthy chicken recipes

தேவையான பொருட்கள்

  • சிக்கன் - 750 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 10-15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

சிக்கன் கிரேவி செய்முறை

தேவையான பொருட்கள்

  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை 1-2
  • இலவங்கப்பட்டை - 1 அங்குலம் அளவு
  • கிராம்பு 4-5
  • வெங்காயம் 2-3 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் 1-2 . (நறுக்கியது)
  • தக்காளி 2-3( அரைத்தது)
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 350 மில்லி
  • இஞ்சி - 1 அங்குலம் அளவு
  • கடலை மாவு - 1 டீஸ்பூன்
  • கசூரி மேத்தி 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

no oil chicken recipe

செய்முறை

  • ஒரு பிரஷர் குக்கரில் சீரகம், பட்டை கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்கவும்.
  • இதில் லேசாக தண்ணீர் தெளித்துக் கொண்டால் குக்கரில் ஒட்டாமல் இருக்கும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பச்சை வாசனை நீங்கிய பிறகு அரைத்த தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து கிளறவும்.
  • இப்போது ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • பின் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
  • குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கிய பிறகு மூடியை திறந்து கிரேவியை கொதிக்க விடவும்.
  • இதனுடன் கசூரி மேத்தி மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். கிரேவி திக்கான பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி சப்பாத்தி, பூரி, தோசை அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நாவூறும் சுவையில் கேரளா ஸ்பெஷல் வாழை இலை மீன் வறுவல்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]