herzindagi
weight loss quick salad recipe

Weight Loss Salad : உடல் எடை சட்டுனு குறைய பச்சை பயறு சாலட் செய்து சாப்பிடுங்க

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான அதே சமயம் சுவைக்கு குறைவில்லாத ஒரு உணவை தேடுகிறீர்களா? இந்த பச்சை பயிறு சாலட் உங்கள் தேடலை பூர்த்தி செய்யும்…
Editorial
Updated:- 2023-04-19, 10:26 IST

பச்சைப்பயிறு பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் இருக்கும். இதனைக் கொண்டு சுண்டல், தோசை அல்லது குழம்பு செய்வது வழக்கம். குறிப்பாக டயட் இருப்பவர்கள் மத்தியில் இந்த பச்சை பயிறு மிகவும் பிரபலமானது. உடல் எடையை குறைப்பவர்களின் அன்றாட புரத தேவையை பூர்த்தி செய்ய இந்த பச்சை பயிறு நிச்சயம் உதவும்.இத்தகைய நற்பண்புகள் நிறைந்த பச்சை பயிறு புரதத்தின் சிறந்த ஆதாரம் ஆகும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பயிறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுடன் உடல் எடையை குறைக்கும் பண்புகளும் உள்ளன. சிறந்த தாவர வகை புரதமான இந்த பச்சை பயிறை உடல் ஜீரணிக்க சற்று தாமதமாகும். நார்ச்சத்து நிறைந்த இந்த பயறு வகை உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் பசி ஆர்வத்தை குறைத்து எடை இழப்பு இலக்கை விரைவில் அடையலாம். எடை இழப்பிற்கு உதவக்கூடிய ஒரு சுவை மிகுந்த சாலட் ரெசிபியை இன்று இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் எளிமையான சூப் ரெசிபி

தேவையான பொருட்கள்

mung salad for weight loss

  • பச்சை பயிறு - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் - ½ கப்
  • குடமிளகாய் - 1
  • நறுக்கிய தக்காளி - ¼ கப்
  • நறுக்கிய மாங்காய் - ¼ கப்
  • துருவிய கேரட் 2-3 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை

green gram salad for quick weight loss

  • காலையில் எழுந்தவுடன் பச்சைப் பயிறை கழுவி சுத்தம் செய்து 5-6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • 6 மணி நேரத்திற்கு பிறகு நீரை வடித்து விட்டு ஊறிய பச்சை பயிறை ஒரு வெள்ளை துணியில் கட்டி முளை கட்ட அனுமதிக்கவும்.
  • இதன் மீது சில துளி தண்ணீர் தெளித்து விட வேண்டும். இரவு தூங்க செல்வதற்கும் முன் ஒரு முறை தண்ணீர் தெளிக்க மறக்காதீர்கள்.
  • மறுநாள் காலையில் பச்சை பயிறு அருமையாக முளைவிட்டு இருக்கும். இதனை ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
  • தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் பச்சை பயிறு குழைந்து விடும். மேலும் தண்ணீரை வடிக்கும் பொழுது ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம். போதுமானவரை ஆவியில் வேக வைப்பது நல்லது.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடமிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இதனுடன் வேகவைத்த பச்சை பயிறு, கேரட், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • காய்கறிகளை சேர்த்த பின் நீண்ட நேரம் சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் மீது எலுமிச்சை சாறு பிழிந்து, கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறலாம்.
  • உங்களுக்கு காய்கறிகளை பச்சையாக சாப்பிட பிடிக்கும் என்றால் நீங்கள் இஞ்சி பூண்டு விழுதை தவிர்த்து விட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் வேகவைத்த பச்சை பயிருடன் சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
  • ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த பச்சை பயிறு சாலட்டை நீங்களும் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: நாவூறும் சுவையில் கேரளா ஸ்பெஷல் வாழை இலை மீன் வறுவல்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]