herzindagi
kerala style banana leaf fish fry recipe

Banana Leaf Fish Fry : நாவூறும் சுவையில் கேரளா ஸ்பெஷல் வாழை இலை மீன் வறுவல்

கேரளாவில் பிரபலமாக மீன் பொழிச்சது என்று அறியப்படும் இந்த வாழை இழை மீன் வறுவல் ரெசிபியை படித்தறிந்து நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-04-18, 10:07 IST

எப்போதும் செய்யும் மீன் வறுவல் போர் அடிக்குதா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள வாழை இலை மீன் வறுவலை செய்து சுவைத்து பாருங்கள். வாழை இலையில் சமைக்கப்பட்ட அந்த மிருதுவான மீனை எடுத்து சாப்பிடும் ஒவ்வொரு வாய்க்கும் எனக்கு நன்றி சொல்லுவீங்க.

பொதுவாக கரிமீன் என்ற வகை மீனை கொண்டு இந்த ரெசிபிக்கு பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இதனை வஞ்சரம், கானாங்கெளுத்தி, வாவல் போன்று சதைப்பற்றி அதிகம் உள்ள எந்த மீன் வகையிலும் செய்யலாம். இதற்கான செய்முறையை இப்போது பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மைதா, வெள்ளை சர்க்கரை, முட்டை, ஓவன் இல்லாமல் பிரவுனி செய்ய முடியுமா?

மீன் ஊறவைக்க தேவையானவை

  • மீன் - 4 துண்டுகள்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

மசாலாவிற்கு தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் (நறுக்கியது) 20-25
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • இஞ்சி - 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  • தக்காளி(நறுக்கியது) - 3
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • தனியா தூள் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

மற்ற பொருட்கள்

  • 4 – 5 அடி வாழை இலை
  • நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை

செய்முறை

kerala fish fry

மீன் வறுக்கும் முறை

  • கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் உப்பு மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • ஒரு தோசை கல்லை சூடாக்கி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இதில் ஊற வைத்துள்ள மீன்களை லேசாக 2 நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும். மீனை முழுமையாக சமைக்க வேண்டாம்.

மசாலா செய்முறை

  • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள இஞ்சி, வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
  • பின்னர் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள தக்காளியுடன் மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
  • மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • தக்காளி மசியும் பதத்திற்கு வதக்கி கொள்ளவும்.
  • இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவுக்கு நல்லா புசுபுசுனு பஞ்சு மாதிரி ராகி பன் தோசை செய்து அசத்துங்க

வாழை இலையில் மீனை சமைக்கும் முறை

vazhai izhai meen varuval

  • வாழை இலையை சில வினாடிகளுக்கு தீயில் வாட்டி எடுக்கவும். இப்படி செய்வதால் வாழை இலை கிழியாமல் இருக்கும்.
  • வாழை இலையின் நடுப்பகுதியில் மசாலாவை வைக்கவும். அதற்கு மேல் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை வைக்கவும். பின்னர் மசாலா கலவையை வைத்து சமமாக பரப்பி விடவும்.
  • பின்னர் வாழை இலையை பொட்டலம் போல் மடித்து கொள்ளவும். வாழை இலையின் நாரை வைத்து இதனை கட்டிகொள்ளலாம்.
  • இப்போது ஒரு கடாயில் வாழை இலை பொட்டலத்தை வைத்து, தண்ணீர் தெளித்து 3 நிமிடங்களுக்கு வேக விடவும்.
  • வாழை இலையை பொறுமையாக திருப்பி போட்டு மறு புறமும் தண்ணீர் தெளித்து 3 நிமிடங்களுக்கு வேகவைத்து கொள்ளவும்.
  • இதனை நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் எலுமிச்சையுடன் பரிமாறலாம். பார்க்கவும், சுவைக்கவும் அற்புதமாக இருக்கும் இந்த வாழை இலை மீன் வறுவல் ரெசிபியை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]