சமையலறையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கிருமிகளோ, துர்நாற்றமோ ஏற்படாதவாறு சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் மழைக்காலத்தில் சமையலறை குப்பைத் தொட்டியில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக குப்பைத் தொட்டியில் கிடக்கும் உணவு மற்றும் காய்கறி கழிவுகள் விரைவாக அழுகும் போது நாற்றமெடுக்கிறது. அதனால்தான் சமையலறையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியை பாக்டீரியா மற்றும் துர்நாற்றம் இல்லாததாக மாற்ற சில குறிப்புகளை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: காய்கறி, பழங்கள் கெட்டு போகமால் நீண்ட நாள் வைத்திருக்க சூப்பரான டிப்ஸ்!!
சமையலறையில், காய்கறித் துண்டுகள் அதன் தோல்கள் உட்பட மற்ற பால், தயிர், தேயிலை இலைகளின் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வைத்திருந்தால் அதை தினமும் வெளியில் வீச வேண்டும். இதைச் செய்யாவிட்டால் குப்பைகள் அழிகி துர்நாற்றம் வீச தொடங்கும், தினமும் இவற்றை தூக்கி எறிவது நல்லது.
குப்பைத் தொட்டியில் பாலித்தீன் கவர் போடவில்லை என்றால் தினமும் சுத்தம் செய்யுங்கள். அழுக்கு மற்றும் குப்பையால் துர்நாற்றம் வீசும். மேலும் குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யாவிட்டால் எஞ்சியிருக்கும் எச்சம் அழுக ஆரம்பித்து, சமையலறையில் துர்நாற்றம் மற்றும் கிருமிகளை ஏற்படுத்துகிறது.
மழைக்காலத்தில் அடிக்கடி ஈரக் கழிவுகளான காய்கறி தோல்கள், அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் துண்டுகள் கெட்டுப்போவதால் அழுகி பூச்சிகளும் அவற்றில் நுழைகின்றன, எனவே மீதமுள்ள உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பிற கழிவுகளை தனித்தனியாக வைக்கவும். அதே சமயம் உலர் குப்பைகளை தனித்தனியாக வைத்து அழுகி துர்நாற்றம் வீச வாய்ப்பு குறைவு.
இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் தக்காளியை இப்படி சேமித்து வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது
இந்த முறைகளைப் பின்பற்றி சமையலறையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கிருமிகள் மற்றும் நாற்றம் வராமல் இருக்கச் செய்யுங்கள்.
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]