herzindagi
homemade mango icecream

Mango Icecream : வெறும் 3 பொருட்கள் போதும், இனி வீட்டிலேயே சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் செய்யலாம்!

உங்களுக்கு மேங்கோ ஐஸ்கிரீம் பிடிக்குமா? இனி அதிகம் செலவு செய்யாமல் வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம். இதற்கான செய்முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம்…
Editorial
Updated:- 2023-06-12, 10:09 IST

ஐஸ்கிரீம் வயது வரம்பின்றி அனைவருக்கும் விருப்பமானது. கோடையை சமாளிக்க ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் மாம்பழங்களை சாப்பிட கோடையை வரவேற்பவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள். கோடையில் கிடைக்கக்கூடிய இரண்டு சிறந்த விஷயங்கள் ஒன்று சேர கிடைத்தால் எப்படி இருக்கும்?

ஆம் இன்றைய பதிவில் மாம்பழங்களை கொண்டு செய்யப்படும் சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் இன் செய்முறையை பார்க்கப் போகிறோம். எந்த வித செயற்கை நிறமோ, சுவையூட்டியோ சேர்க்காமல் வெறும் 3 பொருட்களை வைத்து, இனி வீட்டிலேயே சுலபமாக ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். மேங்கோ ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இந்த ஆவக்காய் ஊறுகாய் வேற லெவல், ட்ரை பண்ணி பாருங்க!

 

தேவையான பொருட்கள்

mango icecream for summer

  • மாம்பழ பியூரி - 1 கப் 
  • குருக்கிய பால் - 3/4 டின் (300 கிராம்)
  • விப்பிங் கிரீம் - 500 மி.லி
  • வெண்ணிலா எசன்ஸ் (விரும்பினால்) - 1/2 டீஸ்பூன்

செய்முறை

summer special icecream recipes

  • நன்கு பழுத்த மாம்பழங்களை தோல் நீக்கி, சிறிய தூண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்க்கவும். இதனை அரைத்து பியூரி தயாரித்து கொள்ளவும்.
  • ஒரு அகண்ட பாத்திரத்தை கிரீம் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். இது கெட்டியான பதத்திற்கு வரும் வரை அடிக்கவும்.
  • கிரீம் உடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது கிரீம் மற்றும் கன்டென்ஸ்டு மில்க் கலவையில் மாம்பழ பியூரி சேர்க்கவும்.
  • நீங்கள் விரும்பினால் இதனுடன் சிறு துளி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதை ஒரு பாக்ஸில் ஊற்றி, சமமாக பரப்பி, குறைந்தது 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து பரிமாரவும்.
  • சுவையான இந்த மேங்கோ ஐஸ்கிரீம் ரெசிபியை நீங்களும் செய்து ருசியுங்கள். 

 

இந்த பதிவும் உதவலாம்: இப்படி மோர் குழம்பு வெச்சு பாருங்க, 4 நாளைக்கு உங்க குழம்பு பத்தி மட்டும் தான் பேசுவாங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]