herzindagi
raagiadai recipe

Ragi Adai Recipe in Tamil: ஆரோக்கியம் நிறைந்த ராகி அடை.. இப்படி செய்தால் டேஸ்ட் இன்னும் சூப்பராக இருக்கும்

ராகி அடை என சொல்லப்படும் கேழ்வரகு அடை செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2023-02-07, 09:58 IST

உடல் ஆரோக்கியத்துக்கு காலை உணவு மிக மிக அவசியம். எந்த ஒரு காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க கூடாது. அதே போல் அந்த காலை உணவு எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவாக இருப்பதை காட்டிலும் தானியங்கள் மற்றும் இயற்கை உணவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் காலை நேரத்தில் இதுப்போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்து கொண்டால் அந்த நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம்.

அந்த வகையில் தமிழர்களின் சிறந்த காலை நேர உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது ராகி அடை எனச் சொல்லப்படும் கேழ்வரகு அடை. இதில் இருக்கும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு காலை நேரத்தில் ராகியில் செய்த அடை, தோசை, உப்புமா ஆகியவற்றை கொடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

இந்த பதிவில் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ராகி அடை எப்படி செய்வது? என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு - 1 கப்
  • முருங்கை கீரை - 1 கப்
  • வெங்காயம் - ½ கப்
  • பச்சை மிளகாய் - 1
  • கடுகு -உளுந்து - 1 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்:வேற லெவல் சுவையில் குழந்தைகளுக்கு பிடித்தமான தக்காளி சாதம்

  • தேங்காய் துருவல் - ¼ கப்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

ragi breakfast

செய்முறை

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு - உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
  • இப்போது அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி உடனே, முருங்கை கீரையை சேர்க்கவும். இந்த கலவையை தனியாக எடுத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து அதனுடன் வதக்கிய கலவை, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும்.
  • இப்போது அதை அடை போல் தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். சூப்பரான ராகி அடை தயார். இதை தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிடால் ருசி அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:அட்டகாசமான ஊறுகாய் ரெசிபி வீட்டிலேயே செய்யலாம்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]