நம்மில் பலரது வீடுகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது வார இறுதியில் கட்டாயம் அசைவ உணவுகள் இடம் பெற்றிருக்கும். ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்பதற்காக சிக்கனை விட மட்டன் எடுப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்தளவிற்கு ஆட்டிறைச்சில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை ஏற்படுத்தும். அதே மட்டன் கறி சாப்பிட்டால் உடல் சூட்டை தணிப்பதோடு இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆனால் என்ன ஒரே மாதிரியாக மட்டன் வைத்து ரெசிபிகள் செய்து சாப்பிடும் போது சில நேரங்களில் நமக்கு சளிப்பாகிவிடும். உங்களுக்காக ராஜஸ்தான் லால் மாஸ் என்றழைக்கப்படும் ராஜஸ்தானி மட்டன் கறி எப்படி செய்வது? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ் இங்கே.
ராஜஸ்தான் ஸ்டைலில் மட்டன் கறி:
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கங்களும், தனித்துவமாக சமைக்கும் திறனும் உள்ளது. இன்றைக்கு பார்க்கவுள்ள ராஜஸ்தானி மட்டன் கறி செய்வதற்கு மத்தானியா மிளகாய் மிகவும் முக்கியமானது. இது உணவிற்கு சுவையை அளிப்பதோடு கிரேவியும் பார்ப்பதற்கு மிகவும் கலர்புல்லாக இருக்கும்.
மேலும் படிக்க:கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்முறை; குழந்தைகளுக்கான ரெசிபி
தேவையான பொருட்கள்:
- மத்தானியா மிளகாய் - 50 கிராம்
- மட்டன் கறி - அரை கிலோ
- பெரிய வெங்காயம் - 5
- இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
- தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள் - தாளிப்பிற்கு ஏற்ப
- உப்பு - ருசிக்கு ஏற்ப
- நெய்- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- ராஜஸ்தானி மட்டன் கறி செய்வதற்கு முதலில் மத்தானியா மிளகாயை தண்ணீர் ஊற வைக்கவும். மிளகாய் தண்ணீரில் நனைத்து மிருதுவாகும் வரை ஊற வைக்க வேண்டும்.
- ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஊற வைத்த மத்தானியா மிளகாயை மிக்ஸில் ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும். பின்னர் மிளகாய் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி நைஸாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதையடுத்து ஒரு அகலமான கடாயில் கடகு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். இந்த ரெசிபிக்கு கடகு எண்ணெய் தான் அதிகளவில் சேர்ப்பார்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை வழக்கமாக சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய்யை சேர்த்து சமைக்கலாம்.
- எண்ணெய் சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஜாதிபத்ரி, ஜாதிக்காய், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை போன்றவற்றை போட்டு தாளிக்க வெண்டும். இதனுடன் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் மத்தானியா மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- கொஞ்சம் வதங்கியவுடன் மட்டன் கறியையும் உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரைத்த மிளகாயை சேர்த்து மட்டன் கறியுடன் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் இதனுடன் சிறிதளவு தனியா தூள், உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும்.5 நிமிடங்களுக்குப் பிறகு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் சேர்த்த பின்னதாக மிதமான சூட்டில் வைத்து சுமார் 1 மணி நேரத்திற்கு மட்டன் கறியை நன்கு வேக வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை உடன் சேர்த்து வதக்கினால் போதும். சுவையான ராஜஸ்தானி ஸ்டைல் மட்டன் கறி ரெடி. ராஜஸ்தானி ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மட்மன் மசாலா கிரேவியை சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு சைடு டிஸ்ஸாக வைத்து சாப்பிடலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation