herzindagi
image

கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்முறை; குழந்தைகளுக்கான ரெசிபி

கர்நாடகா லஞ்ச் பாஸ் ரெசிபியான தக்காளி பாத் செய்து குழந்தைகளுக்கு பரிமாறுங்கள். இது வெறும் தக்காளி சாதம் அல்ல. இதன் சுவை தனித்துவமாக இருக்கும். சுட சுட சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக தெரியும்.
Editorial
Updated:- 2024-10-08, 18:50 IST

கர்நாடகாவில் உள்ள பல கடைகளில் மாலை நேரத்தில் சுட சுட தயாரித்து வழங்கப்படும் உணவுகளில் தக்காளி பாத்-ம் ஒன்று. இதன் நறுமணமும் கொஞ்ச காரசார சுவையும் உங்களை மெய்மறக்க செய்திடும். கூடவே வெள்ளரிக்காய் தயிர் பச்சடி மற்றும் காளிஃபிளவர் 65 இருந்தால் அட டே... ருசியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக செய்து கொடுக்கலாம். பல குழந்தைகள் தக்காளி சாதத்தை விரும்புவதில்லை. ஆனால் இந்த தக்காளி பாத்தை விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

 

தக்காளி பாத் செய்ய தேவையானவை

  • தக்காளி 
  • பச்சை மிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • இலவங்கப்பட்டை
  • கிராம்பு 
  • ஏலக்காய்
  • இஞ்சி 
  • பூண்டு
  • நல்லெண்ணெய்
  • மராட்டி மொக்கு
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • தனியா தூள்
  • சோம்பு 
  • உப்பு
  • தண்ணீர்

image

கர்நாடகா தக்காளி பாத்

தக்காளி பாத் செய்முறை 

  • முதலில் சுவை சேர்க்கும் மசாலா பொருட்களை தயாரிக்கலாம். மிக்ஸியில் ஒரு இஞ்ச் இலவங்கம், எட்டு கிராம்பு, 20 கிராம் இஞ்சி, 15 பல் பூண்டு சேர்த்து அரைக்கவும். இவை உணவின் ருசியை அதிகரிக்கும்.
  • அடுத்ததாக 4 தக்காளியை தண்ணீரில் கழுவி மிக்ஸியில் போட்டு அடித்து தனியாக வைக்கவும்.
  • குக்கரில் பத்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு பிரியாணி இலை, இரண்டு ஏலக்காய், ஒரு டீஸ்பூன் சோம்பு, இரண்டு மராட்டி மொக்கு போட்டு வறுக்கவும்.
  • இப்போது கொஞ்சம் கசூரி மேத்தி, நான்கு பச்சை மிளகாய், இரண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  • புதினா இலைகளை போட்ட பிறகு மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்க்கவும். தக்காளி சாறையும் ஊற்றி அனைத்தையும் நன்கு கலந்துவிடுங்கள்.
  • ஒரு கப் பச்சை பட்டாணி சேருங்கள். மிதமான சூடிலேயே இவை வதங்கட்டும். 
  • ஒன்றரை ஸ்பூன் மிளகாய் மற்றும் தனியா தூள் போட்டு, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேருங்கள். பச்சை வாடை போன பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
  • தேவையான அளவு உப்பு சேருங்கள். ஒரு கொதி வந்தவுடன் ஒன்றரை டம்ளர் அரிசி சேர்த்து மேலே கொத்தமல்லி தூவி குக்கரை மூடிவிடுங்கள்.
  • மூன்று விசில் வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இதன் வாசனை உங்கள் மூக்கை துளைத்து உடனடியாக தட்டில் போட்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்தும். நறுமணம் நிறைந்த தக்காளி பாத் ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]