herzindagi
healthy south indian wheat pasta recipe

Vegetable Wheat Pasta : தென்னிந்திய சுவையில் காரசாரமான மசாலா பாஸ்தா ரெசிபி

எந்த நாட்டு உணவாக இருந்தால் என்ன, நமக்கு ஏற்ற மாதிரி காரசாரமாக மாற்றி நம்ம ஊரு ஸ்டைலில் சாப்பிடுவது தானே அழகு…
Editorial
Updated:- 2023-04-01, 09:44 IST

நூடுல்ஸ், பாஸ்தா போன்ற அயல் நாட்டு உணவுகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம். என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது. ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும்.

இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? மைதாவால் செய்யப்பட்ட பாஸ்தாவுக்கு பதிலாக கோதுமை அல்லது சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தாவை பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் மாறிவிடும்.

இந்த பதிவும் உதவலாம்: வாய் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தோசை

கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்ற காய்கறி கலவையை கொண்டு இந்த மசாலா பாஸ்தாவை செய்து கொடுங்கள். ஆரோக்கியமான உணவை சமைத்துக் கொடுத்து திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும்.

தேவையான பொருட்கள்

wheat pasta recipe

  • கோதுமை பாஸ்தா - 1 கப்
  • தண்ணீர் - 4 கப்
  • வெங்காயம் - ⅓ கப்(நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது - ½ டீஸ்பூன்
  • தக்காளி - 1 கப்
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
  • சீரக தூள் - ¼ டீஸ்பூன்
  • மிளகு தூள் - ¼ டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2
  • தனியா பொடி - ½ டீஸ்பூன்
  • கரம் மசாலா - ¼ டீஸ்பூன்
  • காய்கறி கலவை - 1 கப்
  • சீஸ் - 2-3 டேபிள் ஸ்பூன்
  • சீஸ் - 2-3 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயத்தாள் - சிறிதளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பாஸ்தா வேகவைக்கும் முறை

  • ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • கொதிக்கும் நீரில் பாஸ்தாவை சேர்த்து வேக வைக்கவும்.
  • இதனை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி தயாராக வைக்கவும்.

மசாலா பாஸ்தா செய்முறை

vegetable wheat pasta

  • ஒரு கடையில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் லேசாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் பதத்திற்கு வேகவைத்து கொள்ளவும்.
  • பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி தனியா பொடி, சீரகப்பொடி மற்றும் மிளகு பொடி சேர்த்து கிளறவும்.
  • அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள ஒரு கப் காய்கறி கலவையை மற்றும் ¼ கப் தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு வேகவிடவும்.
  • காய்கறிகள் வெந்தவுடன் தயாராக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • இதன் மீது துருவிய சீஸ் சேர்த்து பரிமாறலாம்.

காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியம் நிறைந்த இந்த மசாலா பாஸ்தாவை நீங்களும் செய்து பாருங்கள். கோதுமை அல்லது சிறுதானிய பாஸ்தாவை பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சென்னை மெரினாவோட ஸ்பெஷல் பீச் சுண்டல் செய்வது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]