herzindagi
marina beach sundal for snack

சென்னை மெரினாவோட ஸ்பெஷல் பீச் சுண்டல் செய்வது எப்படி?

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் மாறி இப்போ சென்னை மெரினா கடற்கரையில் அதிகம் விற்கப்படும் இந்த பீச் சுண்டல் ரெசிபியை செய்ய கற்றுக்கொள்வோமா…
Editorial
Updated:- 2023-03-31, 09:48 IST

இந்திய உணவு என்றால் நம் நினைவுக்கு வருவது தெருவோர உணவுகள் தான். ஒரு சில உணவுகள் நம் குழந்தை பருவத்தின் இனிமையான ஞாபகங்களை நினைவூட்டும். அதிலும் சென்னை வாசிகள் கொடுத்து வைத்தவர்கள், ஒவ்வொரு தெருவுக்கென தனித்துவமான ஸ்பெஷல் உணவுகளை இங்கு சுவைக்கலாம்.

அத்தோ, பானி பூரி, சமோசா, பஜ்ஜி, போலி, சுண்டல் என பல சுவைகளில் விருந்து வைக்கிறது சென்னையின் தெருவோர கடைகள். அதிலும் மெரினா கடற்கரையில் விற்கப்படும் பீச் சுண்டலை சுவைத்தல் பிறந்த பலனை அடையலாம். கடற்கரை அலையை ரசித்தப்படி சூடான சுண்டல் சாப்பிடுவது ஒரு வரம். ஏனோ அங்கு சாப்பிடும் சுவை வேறெங்கும் கிடைப்பதில்லை. இருப்பினும் அதற்கு நிகரான ஒரு பீச் சுண்டல் ரெசிபியை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரு கப் காய்கறி இருந்தா போதும் 5 நிமிஷத்துல கதம்ப சட்னி செய்திடலாம்

தேவையான பொருட்கள்

  • வெள்ளை பட்டாணி – 1 கப்
  • தக்காளி - 1 (நறுக்கியது)
  • வெங்காயம் - 1 (நறுக்கியது)
  • இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  • தனியா பொடி - 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
  • சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

முன் ஏற்பாடுகள்

white peas sundal gravy

  • வெள்ளை பட்டாணியை இரவு முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்: வாய் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தோசை

செய்முறை

  • பீச் சுண்டல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
  • பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, சோம்பு பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  • சேர்த்த மசாலாவின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து வரும் வரை பொறுமையாக சமைக்கவும்.
  • இதனுடன் வேக வைத்த பட்டாணியின் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
  • கிரேவி கொதிக்க ஆரம்பித்த உடன், வேகவைத்த வெள்ளை பட்டாணி சேர்க்கவும்.
  • கிரேவி சற்று நீர்க்க இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இது ஆறிய பிறகு இன்னும் கெட்டியாகும்.
  • உங்களுக்கு தேவையான பக்குவத்தில் கிரேவி தயாரானவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைக்கவும்.

beach sundal recipe

பரிமாறும் முறை

  • முதலில் ஒரு அகண்ட தட்டு அல்லது கிண்ணத்தில் சமோசா, பஜ்ஜி அல்லது வடையை சிறிய துண்டுகளாக போடவும். இதற்கு மேல் சுண்டல் கிரேவியை ஊற்றவும். இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவி பரிமாறவும்.
  • நீங்கள் விரும்பினால் இதில் நொறுக்கிய பானி பூரி அல்லது கார்ன் ஃபிளேக்ஸையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சென்னையின் பீச் சுண்டலை மிஸ் பண்றிங்களா? இந்த ரெசிபியை செய்து அழகிய நினைவுகளுடன் உங்கள் மாலை பொழுதை இனிமையாக்குங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]