herzindagi
banana poori recipe

ஜில்லென்று பெய்யும் மழைக்கு இதமான கேரள ஸ்பெஷல் பழ பூரி ரெசிபி!

<p style="text-align: justify;">வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் தசை ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. <p style="text-align: justify;">&nbsp;
Editorial
Updated:- 2024-08-08, 21:03 IST

தென்மேற்கு பருவ காற்றினால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக மாலை நேரங்களில் பெய்யும் சாரல் மழை இதமாக ஒருபுறம் இருந்தாலும், குளிருக்கு இதமாக ஏதாவது நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும். குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களுக்காகவே முறுக்கு, பஜ்ஜி, பணியாரம், அதிரசம், பால் கொழுக்கட்டை போன்ற பல விதமான ரெசிபிகளைச் செய்துக் கொடுப்பார்கள். 

இந்த ரெசிபிகள் அனைத்தும் சில நேரங்களில் சளிப்பை நமக்கு ஏற்படுத்தி விடலாம். இதைத் தவிர்க்கவும் குளிர்காற்றிற்கு இதமாக ஏதாவது கிரிப்ஸியாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இதோ கேரள ஸ்டைலில் வாழைப்பழத்தைக் கொண்டு பழ பூரி செய்து சாப்பிடுங்கள். காரம் மற்றும் இனிப்பு கலந்து சுவையுடன் இருக்கும் இந்த பூரி மனதை  புத்துணர்ச்சியாக்குவதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும். இதோ அடிக்கும் மழைக்கு இதமான பழ பூரி ரெசிபியை எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ்கள் உங்களுக்காக.

மேலும் படிக்க: ஸ்டார் ஹோட்டல் தரத்திற்கு கோபி மஞ்சூரியன் வேண்டுமா? இப்படி செய்யவும்-சிம்பிள்!

தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு - 3 கப்
  • சர்க்கரை - 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா- சிறிதளவு
  • அரிசி மாவு - சிறிதளவு
  • வாழைப்பழம் - 3  ( நேந்திரம் அல்லது ஏதாவது ஒரு வாழைப்பழம்)
  • எண்ணெய் - தேவையான அளவு

வாழைப்பழ பூரி செய்முறை:  

  • வாழைப்பழ பூரி செய்வதற்கு முதலில் எடுத்து வைத்துள்ள மைதா மாவை முதலில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • பின்னர் இதனுடன் சர்க்கரை, மஞ்சள், பேக்கிங் சோடா மற்றும் அரிசி மாவு போன்றவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். தற்போது வாழைப்பழ பூரி செய்வதற்கான மாவு ரெடி.
  • இதையடுத்து நேந்திரம் அல்லது வேறு வாழைப்பழங்களைத் தோல் நீக்கி,  நீள வாக்கில் அறுத்து வைத்துக் கொள்ளவும். 
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் வாழைப்பழ பூரி செய்வதற்காக செய்து வைத்துள்ள மாவு கலவையில் வாழைப்பழத்தை நனைத்து எண்ணெய் சேர்த்து பொரித்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் மொறு மொறு வாழைப்பழ பூரி ரெடி.

மேலும் படிக்க: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி!


palam poori...

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

வாழைப்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. மேலும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் தசை ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]