herzindagi
image

இட்லி குக்கரில் சூப்பரான மோமோஸ் செஞ்சு ருசிக்கலாம்; ரெசிபி இங்கே

மழைக்காலத்தில் மாலை நேரம் சூடாக மோமோஸ் தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுத்தால் உங்களை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். மோமோஸ் செய்வதற்கு இட்லி குக்கர் போதும்.
Editorial
Updated:- 2024-11-30, 10:55 IST

திபெத்திய உணவான மோமோஸ் வட இந்தியாவில் மிகப் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் ஆகும். மாலை நேரத்தில் சிறு சிறு கடைகள் அமைத்து வித விதமான மோமோஸ் தயாரித்து விற்பனை செய்வார்கள். இதில் உங்களுக்கு பிடித்த காய்கறிகள், பனீர், சோயா, சிக்கன் என எதை வேண்டுமானாலும் ஸ்டப்ஃபிங் செய்து வேக வைப்பார்கள். 10-15 நிமிடங்களில் மோமோஸ் வேக வைத்து தொட்டு சாப்பிட காரமான சட்னி, மயோனைஸ் வழங்குவார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். வாருங்கள் இதன் செய்முறையை பார்க்கலாம். மைதா மாவும் வீட்டில் சில காய்கறிகள் இருந்தாலே போதும் சுவையான மோமோஸ் தயாரிக்கலாம். ஏறக்குறைய இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டை செய்வது போல மோமோஸ் செய்முறை இருக்கும்.

மோமோஸ் செய்யத் தேவையானவை

மைதா மாவு
தண்ணீர்
நல்லெண்ணெய்
கேரட்
பீன்ஸ்
முட்டைகோஸ்
வெங்காயம்
இஞ்சி
பூண்டு
மிளகு
சோயா சாஸ்
உப்பு
மிளகாய் தூள்

veg momos recipe

மோமோஸ் செய்முறை

  • வெஜ் மோமோஸ் செய்வதாக இருந்தால் ஒரு கேரட், ஒரு பீன்ஸ், 150 கிராம் முட்டைகோஸ் எடுத்து பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு 3-4 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  • அடுத்ததாக காய்கறிகளில் இருந்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும். காய்கறியில் தண்ணீர் அதிகம் இருந்தால் மோமோஸ் உடைந்துவிடும்.
  • பேனில் இரண்டு ஸ்பூன் நல்லண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயம், 20 கிராம் இஞ்சி, 20 கிராம் இடித்த பூண்டு போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் சோயா சாஸ், கால் டீஸ்பூன் மிளகு தூள் போடுங்கள்.
  • இறுதியாக வேகவைத்த காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.
  • மோமோஸ் மாவு தயாரிக்க மைதா 2 கப் மற்றும் அரை கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். மைதாவில் பூரி மாவு பிசைவது போல் நினைத்து கொள்ளவும்.
  • மாவு பிசைந்த பிறகு அரை மணி நேரம் துணி போட்டு மூடிவிடுங்கள். இப்போது மாவை இரண்டாக பிரித்து மீண்டும் ஒரு நிமிடத்திற்கு பிசையவும்.
  • மாவை சதுர வடிவிற்கு சப்பாத்தி கட்டையால் அழுத்தி ரோல் செய்து ஒரு இஞ்ச் இடைவெளியில் பீஸ் போடவும்.
  • ஒவ்வொன்றையும் சப்பாத்தி கட்டையால் 3 செ.மீ வட்டத்திற்கு தேய்க்கவும். மாவு எடுக்கும் போது கையில் ஒட்டுவதாக இருந்தால் மைதா மாவு தூவவும்.
  • மாவின் ஓரம் மெல்லிசாக இருப்பது அவசியம். அப்போது தான் ஸ்டப்ஃபிங் செய்த பிறகு ஒட்டுவதற்கு எளிதாக இருக்கும்.
  • ஒவ்வொரு பீஸிலும் ஒரு ஸ்பூன் அளவிற்கு காய்கறிகளை ஸ்டஃப்பிங் செய்து கூம்பு அல்லது சோமாஸ் வடிவில் மடித்திடுங்கள்.
  • இதே செய்முறை சிக்கன் மற்றும் பனீர் மோமோஸிற்கு பின்பற்றுங்கள். காய்கறிகளுக்கு பதில் சிக்கன், பனீர்.
  • இட்லி வேக வைப்பது போல இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு முதல் இரண்டு அடுக்குகளில் மட்டும் மோமோஸ் நிரப்பி 10-12 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  • இதை கார சட்னியோடு தொட்டு சாப்பிடுங்கள். அற்புதமாக இருக்கும்.

மேலும் படிங்க ஸ்பெஷல் மங்களூரு பன் எனும் வாழைப்பழ பூரி ரெசிபி; அட்டகாசமான ஸ்நாக்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]