herzindagi
image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் "மருந்து குழம்பு" செய்முறை

மூதாதையர்கள் கண்டுபிடித்த மருந்து குழம்பு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. மழைக்கால நோய்கள் அண்டாமல் இருக்க வாரம் ஒரு முறை மருந்து குழம்பு செய்து சாப்பிடவும்.
Editorial
Updated:- 2024-12-04, 16:34 IST

ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாக பார்க்க போவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நம்முடைய மூதாதையர்கள் கண்டுபிடித்த மருந்து குழம்பு. இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு இரண்டு முறை செய்து சாப்பிட்டால் மழைக்கால நோய்கள் நோய்கள் அனைத்தையும் தவிர்த்துவிடலாம். குறிப்பாக காய்ச்சல், தொற்று பரவல், மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே அக்காலத்தில் மருந்து குழம்பு சாப்பிட்டு வந்தனர். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

marundhu kulambu recipe

மருந்து குழம்பு செய்ய தேவையானவை

  • கண்ட திப்பிலி
  • மஞ்சள் கடுகு
  • சீரகம்
  • கடுகு
  • பெருங்காயம்
  • தக்காளி
  • வெங்காயம்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • பூண்டு
  • வெந்தயம்
  • நல்லெண்ணெய்
  • இஞ்சி

மருந்து குழம்பு செய்முறை

  • பேனில் எண்ணெய் ஊற்றாமல் மூன்று ஸ்பூன் மிளகு போட்டு வறுக்கவும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் போடுங்கள்.
  • அடுத்ததாக மஞ்சள் கடுகு ஒன்றரை ஸ்பூன், சீரகம் மூன்று ஸ்பூன், 6 கண்ட திப்பிலி போட்டு தனித்தனியே வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் சேர்க்கவும்.
  • கண்ட திப்பிலி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். கண்ட திப்பிலி பயன்படுத்தும் முன் தண்ணீரில் நன்கு கழுவி காய வைக்கவும்.
  • மிக்ஸியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்திடுங்கள்.
  • கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை, 30 பல் பூண்டு போட்டு வறுக்கவும்.
  • இதன் பிறகு இரண்டு மீடியம் சைஸ் வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன் இரண்டு தக்காளி பொடிதாக நறுக்கி போடுங்கள்.
  • இப்போது மசாலா பொருட்கள் சேர்க்கலாம். ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு போடுங்கள்.
  • அடுத்ததாக 50 கிராம் புளியை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கரைத்து கடாயில் ஊற்றுங்கள். கூடுதலாக கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
  • மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை முழுவதுமாக கடாயில் கொட்டி ஒரு ஸ்பூன் பவுடர் வெல்லம் சேருங்கள்.
  • ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் போட்டு ஒரு கொதிவந்தவுடன் அடுப்பில் இருந்து கடாயை எடுத்துவிடுங்கள்.
  • இறுதியாக 20 கிராம் இஞ்சி போட்டு குழம்பை கலக்கவும். இதில் இரண்டு கரண்டி எடுத்து சாதத்தில் பிரட்டி சாப்பிடுங்கள். தொண்டை கரகரப்பு, சளி மத்தியிலும் சுவை தெரியும்.

மேலும் படிங்க இட்லி குக்கரில் சூப்பரான மோமோஸ் செஞ்சு ருசிக்கலாம்; ரெசிபி இங்கே

மருந்து குழம்பை சாதத்தில் பிரட்டி அல்லது இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிடலாம். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]