herzindagi
parotta recipe tamil

kothu parotta : கமகமக்கும் கொத்து பரோட்டா செய்முறை

சுடச்சுட கமகமக்கும் சுவையில் கொத்து பரோட்டா செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2023-02-22, 10:05 IST

உணவு பிரியர்களையும் பரோட்டாவையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. பிரியாணிக்கு அடுத்தப்படியாக உணவு பிரியர்கள் அதிகம் விரும்பி, தேடி தேடி உண்ணும் உணவாக உள்ளது பரோட்டா. வெறும் பரோட்டா என ஒரு வார்த்தையில் முடித்து விட முடியாது. பரோட்டாவிலும் ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. பன் பரோட்டா, சில்லி பரோட்டா, வாழை இலை பரோட்டா, கிழி பரோட்டா, கொத்து பரோட்டா, கறி பரோட்டா, கொஸ்து பரோட்டா என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பரோட்டா பிரியர்கள் அதிகம் விரும்பி உண்பது கொத்து பரோட்டா. ரோட்டுக்கடை கொத்து பரோட்டா என்றால் இன்னும் ஸ்பெஷல். முட்டை, கறி குழம்பு, கொத்தமல்லி, மல்லி தூள் சேர்த்து கமகம சுவையில் சுடச்சுட பரிமாறப்படும் கொத்து பரோட்டா சென்னைவாசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் உணவாக உள்ளது. கூடவே இதனுடன் சால்னா கொஞ்சம் ஊற்றி சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்:பன்னீரை வைத்து இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்து இருக்கீங்களா?

இப்போது இந்த பதிவில் கொத்து பரோட்டா செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பரோட்டா - 2
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • முட்டை - 2
  • பச்சை மிளகாய் - 1
  • கடுகு - ½ டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - ½ டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சிக்கன் குழம்பு - 1 கப்

recipe tamil

செய்முறை

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காய சேர்க்கவும்.
  • இப்போது அதில், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலந்து அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
  • இவை எண்ணெயில் நன்கு கலந்ததும் உப்பு, மிளகு தூள், உதிர்த்து வைத்திருக்கும் பரோட்டா சேர்த்து நன்கு கிளறவும்.
  • இறுதியாக இதன் மேல் சிக்கன் குழம்பு ஊற்றி நன்கு வதக்கி, கொத்தமல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான ரோட்டுக்கடை கொத்து பரோட்டா தயார்.

இந்த பதிவும் உதவலாம்:பைன்-ஆப்பிள் கேசரி செய்வது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]