herzindagi
image

கிட்ஸ் ஸ்பெஷல் டோரேமான் பேன்கேக் ரெசிபி; 30 நிமிடத்தில் செய்யலாம்

பள்ளி முடிந்து சோர்வாக வீடு திரும்பும் பிள்ளைகளின் முகத்தில் உடனடியாக புன்னகையை வரவழைக்க வேண்டுமா ? கிட்ஸ் ஸ்பெஷல் டோரேமான் டோரேயாகி பேன்கேக் செய்ய தெரிஞ்சுகோங்க. அரை மணி நேரத்தில் செய்து கொடுக்கலாம். 
Editorial
Updated:- 2025-02-06, 17:38 IST

சமையலில் சிறுவர்களை திருப்திப்படுத்துவது மிகவும் சிரமமான காரியம். டிவி, ஹோட்டல் அல்லது வெளியே எங்காவது எதையாவது பார்த்துவிட்டு அதை வீட்டில் சாப்பிட்டே ஆக வேண்டும் என அடம்பிடிப்பார்கள். கதறி அழும் குழந்தைகள், பல் இல்லாத பெரியவர்களை கூட சமாளித்துவிடலாம். சிறுவர்களுக்கு பிடித்த உணவுகளை தொடர்ந்து கொடுத்தாலும் புதுசு புதுசாக கேட்டு கொண்டே இருப்பார்கள். சிறுவர்கள் டிவியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் டோரேமானும் ஒன்று. சோட்டா பீமிற்கு லட்டு எவ்வளவு பிடிக்குமோ டோரேமானுக்கு டோரேயாகி அந்தளவு பிடிக்கும். டோரேமான் நிகழ்ச்சியை பார்க்கும் சிறுவர்களுக்கும் டோரேயாகி பேன்கேக் பிடிக்கும். இதை எப்படியாவது ருசித்தாக வேண்டும் என அவர்களுக்கு தோன்றும். இந்த பதிவில் டோரேமான் பேன்கேக் செய்முறையை பார்க்கலாம். இதை செய்வதற்கு அரை மணி நேரம் கூட எடுக்காது. 6-7 பொருட்களை வைத்து எளிதில் தயாரித்து விடலாம்.

Japanese Dorayaki

டோரேமான் பேன்கேக் செய்ய தேவையானவை

  • மைதா மாவு
  • தேன்
  • முட்டை
  • சர்க்கரை
  • சாக்லேட் க்ரீம்
  • பேக்கிங் பவுடர்
  • பால்
  • வெண்ணெய்

மேலும் படிங்க  புரதச்சத்து நிறைந்த சோயா சங்க்ஸ் ரெசிபி; அட்டகாசமான சைட் டிஷ்

டோரேமான் பேன்கேக் செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி விஸ்க் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு அடிக்கவும். அதன் பிறகு 125 மில்லி லிட்டர் பால் ஊற்றுங்கள்.
  • இதனுடன் அரைத்து பொடியாக்கிய 50 கிராம் சர்க்கரை, மூன்று ஸ்பூன் தேன், 4 ஸ்பூன் வெண்ணெய் கலக்கவும்.
  • அடுத்ததாக 150 கிராம் மைதா மாவு, கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர் போட்டு விஸ்க் வைத்து 5 நிமிடங்களுக்கு கலந்துவிட்டு கொண்டே இருங்கள்.
  • பஜ்ஜி மாவு பதத்தில் டோரேமான் பேன்கேக் மாவு தயாராகும்.
  • நான்-ஸ்டிக் டவாவில் ஒரு கரண்டி மாவு ஊற்றி தலா இரண்டு நிமிடங்களுக்கு முன்புறம், பின்பறம் திருப்பி போட்டு வேக வைக்கவும். சரியான அளவுகளில் பொருட்கள் பயன்படுத்தி இருந்தால் பேன்கேக் பஞ்சு போல வரும்.
  • இப்போது இரண்டு பேன் கேக் இடையே தேவையான அளவு சாக்லேட் க்ரீம் நிரப்பவும். சாக்லேட் க்ரீம் கிடைக்கவில்லை என்றால் டெய்ரி மில்க் சாக்லேட்டை உருக்கி அதை பேன்கேக்கில் தடவவும்.
  • சாக்லேட் க்ரீம் 5 நிமிடங்களில் ஒட்டி விடும். அதன் பிறகு பிள்ளைகளுக்கு கொடுத்து மகிழுங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]