herzindagi
image

புரதச்சத்து நிறைந்த சோயா சங்க்ஸ் ரெசிபி; அட்டகாசமான சைட் டிஷ்

சைவப் பிரியர்களின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்வதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட உணவாக சோயா சங்க்ஸ் எனும் சோயா ரோஸ்ட் ரெசிபியை குறிப்பிடலாம். வாய்க்கு ருசியாக சாப்பிட விரும்புவோர் சோயா சங்க்ஸ் சமைக்கலாம்.
Editorial
Updated:- 2025-02-05, 23:27 IST

100 கிராம் சோயா சங்க்ஸில் 36 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது. இதை மீல் மேக்கர் என்று அழைக்கிறோம். 100 கிராம் சிக்கனில் கூட 27 கிராம் புரதம் மட்டுமே உள்ளது. வெஜ் பிரியாணி, பிரிஞ்ஜி தயாரிப்பில் சோயா சங்க்ஸ் பயன்படுத்துகிறது. ஒரு சில கல்யாண வீடுகளின் விருந்தில் மீல் மேக்கரை வறுத்து வைத்திருப்பார்கள். இதன் ருசி அட்டகாசமாக இருக்கும். சோயா சங்க்ஸை சுட சுட சாப்பிடலாம், வெரைட்டி ரைஸின் சைட் டிஷ் ஆகவும் சுவைக்கலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

soya chunks

சோயா சங்க்ஸ் ரோஸ்ட் செய்ய தேவையானவை

  • மீல் மேக்கர்
  • தனியா
  • மிளகு
  • சீரகம்
  • சோம்பு
  • கொப்பரை தேங்காய்
  • பொட்டுக்கடலை
  • கரம் மசாலா
  • குண்டு மிளகாய்
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தனியா தூள்
  • மஞ்சள் தூள்
  • வெங்காயம்
  • தக்காளி
  • கடலெண்ணெய்
  • தண்ணீர்

மேலும் படிங்க  உப்புமா பதிலாக காரா பாத் செஞ்சு சாப்பிடுங்க; கர்நாடகா பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி

சோயா சங்க்ஸ் ரோஸ்ட் செய்முறை

  • இரண்டு மணி நேரத்திற்கு 200 கிராம் மீல் மேக்கரை தண்ணீரில் ஊறவைக்கவும். சோயா சங்க்ஸ் ரோஸ்ட் செய்வதற்கு முதலில் ஒரு பவுடர் தயாரிக்க வேண்டும்.
  • பேனில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒன்றரை டீஸ்பூன் சோம்பு, 20 கிராம் கொப்பரை தேங்காய் போட்டு சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  • சூடு குறைந்தவுடன் 3 டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். இதை தனியாக வைக்கவும். இறுதியில் தேவைப்படும்.
  • கடாயில் 5 ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி சூடானதும் 5 குண்டு மிளகாய், 15 சின வெங்காயம், காரத்திற்கு 2 பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
  • சின்ன வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு தேவையான அளவு உப்பு சேருங்கள்.
  • வெங்காயம் வதங்கியவுடன் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். பச்சை வாடை போன பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளி சேர்க்கவும்.
  • இப்போது அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், முக்கால் டீஸ்பூன் கரம் மசாலா போட்டு 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.
  • தண்ணீர் வத்தியவுடன் இரண்டு டீஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றுங்கள். தொக்கு பக்குவத்திற்கு இந்த மசாலா மாறும்.
  • அடுத்ததாக தண்ணீரில் ஊறவைத்த மீல் மேக்கரை வடிகட்டி கடாயில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இதன் பிறகு ஆரம்பத்தில் அரைத்த மசாலா இரண்டு டீஸ்பூன் போடலாம்.
  • கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு விட்டு தெளித்து இரண்டு நிமிடங்களுக்கு அதிகமான தீயில் மீல் மேக்கர் வறுத்தெடுக்கவும்.

இப்படி செய்தால் சூப்பரான சோயா சங்க்ஸ் ரோஸ்ட் ருசிக்கலாம்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]