உப்புமா என்ற வார்த்தையை கேட்டாலே பெரும்பாலானோருக்கு பிடிப்பதில்லும். குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உப்புமா கொடுத்தால் முகம் சுழிப்பார்கள். அதற்காக ரவையில் கிடைக்கும் சத்துகளை நாம் தவிர்த்துவிட முடியாது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் காலை வேளையில் பலரும் காரா பாத் ருசிக்கின்றனர். உப்புமாவை போல ரவை வைத்து செய்யக்கூடியது தான் இந்த காரா பாத். அங்கு நீர் சட்னி என்றழைக்கப்படும் தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடுவதற்கு காரா பாத் மிக ருசியாக இருக்கும். இதை உங்களுடைய குழந்தைகள் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். வாருங்கள் காரா பாத் செய்முறையை பார்க்கலாம்.
கர்நாடகா காரா பாத் செய்ய தேவையானவை
- ரவை
- தேங்காய் துருவல்
- நெய்
- எண்ணெய்
- முந்திரி பருப்பு
- கடலை பருப்பு
- கேரட்
- பச்சை பட்டாணி
- பீன்ஸ்
- எலுமிச்சை சாறு
- கடுகு
- வெங்காயம்
- சீரகம்
- தக்காளி
- வாங்கி பாத் பவுடர்
- கறிவேப்பிலை
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
மேலும் படிங்கபழுக்காத பப்பாளி இருந்தால் சுவையான டுட்டி ஃப்ரூட்டி தயாரிக்கலாம்; குட்டீஸுக்கு பிடிக்கும்
கர்நாடகா காரா பாத் செய்ய தேவையானவை
- கடாயில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்தி கரைந்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேருங்கள். இதில் 10-15 முந்திரி போட்டு பொன்னிறத்திற்கு மாறும் வரை வறுத்தெடுக்கவும்.
- முந்திரியை வெளியே எடுத்தவுடன் அதே எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பொடிதாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
- அடுத்ததாக ஒரு கப் பொடிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போடுங்கள். வெங்காயம் சீக்கிரமாக வதங்கி விடும். இதோடு ஒரே தக்காளி சேருங்கள்.
- சில நிமிடங்கள் கழித்து கொஞ்சமாக பச்சை பட்டாணி, பொடிதாக நறுக்கிய ஒரு கேரட், இரண்டு பீன்ஸ் போட்டு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.
- இப்போது ஒரு கப் பாம்பே ரவை சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். ரவை ஓரளவு வறுத்த பிறகு மூன்று கப் தண்ணீர் ஊற்றுங்கள். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கலாம்.
- கேசரி செய்முறையை இதற்கும் பின்பற்றுங்கள். தீயின் வேகத்தை குறைத்து ஒரு டீஸ்பூன் வாங்கி பாத் பவுடர் போடுங்கள்.
ஒரு ஸ்பூன் நெய் போட்டு கலந்துவிட்ட பிறகு கால் எலுமிச்சை பழத்தின் சாறு ஊற்றுங்கள். மேலே தேங்காய் துருவல், வறுத்த முந்திரி பருப்பு போட்டால் சுவையான காரா பாத் ரெடி.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation