herzindagi
kerala fish curry easy easy recipe

கேரளா ஸ்பெஷல் மீன் கறி செய்வது எப்படி என தெரியுமா?

கேரளா ஸ்பெஷல் மீன் கறி செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2022-12-24, 08:00 IST

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவின் உணவு வகைகளுக்குத் தனி வரலாறு உண்டு. அதிலும் கேரளா மாநிலத்தின் வட்டார உணவுகள் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நெய் சோறு, புட்டு, கடலைக் கறி, செம்மீன், மீன் பொளிச்சது, அடைப் பிரதமன், மலபார் மீன் குழம்பு, மீன் கறி, அப்பம் போன்ற ஏராளமான கேரளா உணவுகள் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல உணவுகளாக இருந்து வருகின்றன. கேரளாவில் கடற்கரை அதிகம் இருப்பதால் மீன் உணவுகள் அவர்களின் பிரதான உணவு பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

கேரளாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் அசைவ உணவுகளில் மீன் தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் தான் மீன்களில் பலவிதமான உணவு வகைகளை அவர்கள் சமைத்து உண்பார்கள். அதே போல் கேரளாவில் மத்தி மீன் மிகவும் பிரபலம். மண் சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மணக்க மணக்க மீன் குழம்பு வைத்து அதை கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு வைத்து சாப்பிடுவார்கள். எப்படி கேரள பெண்களின் அழகுக்கு நீர் மற்றும் மண்வளம் காரணமோ அதேபோல் அவர்களின் சமையலுக்கு நீர் முக்கிய காரணமாக இருந்து சுவையைக் கூட்டுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் கேரளா ஸ்பெஷல் மீன் கறி செய்வதற்கான செய்முறையை பகிர்கிறோம். படித்து விட்டு நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

kerala famous fish curry

  • அயிலை மீன் - 1 கிலோ
  • சின்ன வெங்காயம் - 8
  • தக்காளி - 1
  • இஞ்சி - 1
  • பூண்டு - 7
  • கறிவேப்பிலை- சிறிதளவு

இந்த பதிவும் உதவலாம்: திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?

  • பச்சை மிளகாய் - 3
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • தனியா தூள் - 1.1/2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் -1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

kerala special fish curry

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதே கடாயில் முழு தக்காளியை அப்படியே சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸி அல்லது அம்மியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: கடை சுவையையே தோற்கடிக்கும் ஒரு சிக்கன் மசாலா! வீட்டிலேயே செய்வது எப்படி?

  • இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் புளி தண்ணீர் ஊற்றித் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  • பின்பு உப்பு சேர்த்து 6-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.
  • மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கேரளா மீன் கறி தயார்.

குறிப்பு: இந்த மீன் கறி ரெசிபியில் அயிலை மீன் மட்டுமில்லை நீங்கள் விரும்பும் எந்த மீனையும் சேர்த்து செய்யலாம். அதே போல் தேங்காய் எண்ணெய் வாசனை பிடிக்காதவர்கள் மற்ற எண்ணெயிலும் சமைக்கலாம். ஆனால் பாரம்பரிய ருசி தேங்காய் எண்ணெயில் சமைத்தால் மட்டுமே கிடைக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]