herzindagi
image

கர்நாடகா ஸ்பெஷல் ஷாவிகே பாத்; அற்புதமான பிரேக் பாஸ்ட் ரெசிபி

காலையில் பெரும் சிரமமின்றி உணவை தயாரித்து வேலைக்கு புறப்பட நினைக்கும் நபர்களுக்கு இந்த கர்நாடக ஸ்பெஷல் ஷாவிகே பாத் பெரிதும் உதவும். இந்த ஷாவிகே பாத் எளிதில் தயாரிக்க கூடியது. எனினும் ஆரோக்கியம் நிறைந்தது.
Editorial
Updated:- 2024-11-03, 20:56 IST

5 நிமிடங்களுக்குள் ஒரு டிபன் அல்லது பிரேக் பாஸ்ட் தயார் செய்து வேலைக்கு கிளம்ப நினைக்கும் பலருக்கு கர்நாடகா ஸ்பெஷல் ஷாவிகே பாத் ரெசிபி சரியான தேர்வாகும். கண் மூடி திறப்பதற்குள் இதை எளிதாக தயாரித்து அடுத்த 10 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து வேலைக்கு புறப்படலாம். இது சத்தாக இருக்குமா என்ற கேள்வியே உங்களுக்கு வேண்டாம். கேரட், பீன்ஸ், முட்டைஸ்கோஸ், வெங்காயம், வேர்க்கடலை, முந்திரி போட்டு ஒட்டுமொத்த ஊட்டச்சத்துகளையும் இதனுடன் அடக்கிவிடலாம். ஷாவிகே பாத் செய்முறை மிக மிக எளிதானது. சேமியா பாக்கெட் உங்களிடம் இருந்தால் போதும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

shavige bath ingredients

ஷாவிகே பாத் செய்ய தேவையானவை

  • சேமியா
  • பெரிய வெங்காயம்
  • வேர்க்கடலை
  • முந்திரி
  • பீன்ஸ்
  • கேரட்
  • கொத்தமல்லி
  • முட்டைகோஸ்
  • மஞ்சள் தூள்
  • எலுமிச்சை சாறு
  • உப்பு
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • கடலை பருப்பு
  • நல்லெண்ணெய்

மேலும் படிங்க கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்முறை; குழந்தைகளுக்கான ரெசிபி

ஷாவிகே பாத் செய்முறை

  • கடாயில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு போட்டு தண்ணீர் நன்கு கொதித்த உடன் 100 கிராம் சேமியாவை உள்ளே போடுங்கள்.
  • இரண்டு நிமிடங்களுக்கு சேமியாவை வேக வைத்தால் போதுமானது. தண்ணீரை வடிகட்டி விட்டு சேமியாவை தனியே வைக்கவும்.
  • பேனில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உங்களுக்கு பிடித்தமான அளவு வேர்க்கடலை, முந்திரி போட்டு வறுத்தெடுக்கவும். இதை எடுத்துவிட்டு மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை டீஸ்பூன் கடுகு போடுங்கள்.
  • கடுகு வெடித்தவுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
  • அடுத்ததாக இரண்டு வர மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் அளவிற்கு நறுக்கிய இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் பொடிதாக நறுக்கி போட்டு வதக்கவும்.
  • இதன் பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை சேருங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியவுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு ஒரு நிமிடம் காத்திருங்கள்.
  • வெங்காயம் வதங்கும் நேரத்திலேயே ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரு கேரட், 25 கிராம் பீன்ஸ், 100 கிராம் முட்டை கோஸை நறுக்கி போட்டு வறுக்கவும்.
  • இப்போது வேகவைத்த சேமியாவை இவற்றுடன் சேர்த்து நன்கு கலந்த பிறகு இரண்டு நிமிடங்களுக்கு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து காய்கறிகள் ரோஸ்ட் ஆகட்டும்.
  • இறுதியாக மேலே கொஞ்சம் கொத்தமல்லி தூவினால் சூப்பரான ஷாவிகே பாத் ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]