herzindagi
image

ருசியான கண்ணூர் கலத்தப்பம் ரெசிபி; குழந்தைகளுக்கு பிடிக்கும்

கண்ணூர் கலத்தப்பத்தை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டு கலத்தப்பம் எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2024-11-12, 16:42 IST

கலத்தப்பம் என்பது கேரளாவின் மலபார் கண்ணூர் பகுதியில் மிகவும் பிரபலமான உணவாகும். மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது கலத்தப்பத்தை ருசிப்பார்கள். இதை கேரளாவின் பாரம்பரிய ஸ்வீட் என குறிப்பிடலாம். பச்சரிசி, சாப்பாட்டு அரிசி, வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் கலத்தப்பம் ருசி மிக்கது. பல ஆண்டுகளுக்கு முன்பாக இதை மண்கலத்தில் நிலக்கரி பயன்படுத்தி தயாரிப்பார்கள். இப்போது வீட்டில் கேக் செய்வது போல குக்கரில் தயாரிக்கிறார்கள். 10 பொருட்களை கொண்டு கலத்தப்பத்தை எளிதில் செய்யலாம்.

kalathappam recipe

கலத்தப்பம் செய்ய தேவையானவை

  • பச்சரிசி
  • சாப்பாட்டு அரிசி
  • வெல்லம்
  • தண்ணீர்
  • நெய்
  • ஏலக்காய் தூள்
  • சின்ன வெங்காயம்
  • தேங்காய்

மேலும் படிங்க கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம், மொறுமொறு பொரி உருண்டை ரெசிபி

கலத்தப்பம் செய்முறை

  • ஒன்றரை கப் பச்சரியை தண்ணீரில் நன்கு கழுவி பிறகு நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடுங்கள். கலத்தப்பம் மாவு தயாரிக்க சாப்பாட்டு அரிசியை வேக வைத்து அரை கப் எடுத்து கொள்ளுங்கள்.
  • இப்போது பாத்திரத்தில் 350 கிராம் வெல்லம் எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கரைய விடுங்கள்.
  • அடுத்ததாக மிக்ஸியில் ஊறவைத்த பச்சிரிசி, வேகவைத்த சாப்பாட்டு அரிசி, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
  • மிக்ஸியில் அரைத்த பிறகு கலத்தப்பம் மாவில் ஒரு டீஸ்பூன் ஏலக்காய் தூள், இரண்டு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கவும்.
  • அனைத்தையும் விஸ்க் வைத்து அடித்து நன்கு கலக்கவும். வெல்லம் கரைந்த பிறகு அதை வடிகட்டி சூட்டோடு சூடாக மாவில் ஊற்றுங்கள்.
  • ஆரம்பத்தில் தண்ணீயாக இருந்த மாவு தற்போது கொஞ்சம் கெட்டியாக தெரியும்.
  • குக்கரில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்தி அது உருகிய பிறகு கால் மூடி தேங்காய் மற்றும் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போட்டு வறுக்கவும்.
  • தேங்காய், வெங்காயத்தை வறுத்த பிறகு கலத்தப்பம் மாவை குக்கரில் ஊற்றி மிதமான சூட்டிற்கு அடுப்பை மாற்றவும்.
  • குக்கரை மூடுங்கள். விசில் போட தேவையில்லை. 10-12 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவிடவும்.
  • இப்போது குக்கரை திறந்து ஒரு குச்சியை வைத்து குத்திபாருங்கள். மாவு ஒட்டவில்லை என்றால் சுவையான கலத்தப்பம் ரெடி.
  • சூடு குறைந்த பிறகு கேக் எடுப்பது போல குக்கரில் இருந்து எடுத்து பீஸ் போட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு மாலை நேரத்தில் டீ, காஃபியோடு பகிரவும்.
  • இனிப்பு இல்லாத கலத்தப்பம் வேண்டுமென்றால் 50 கிராம் வெல்லம் மட்டுமே போடுங்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]